Tuesday, September 1, 2009

சிவக்குமார் என்னும் உன்னத மனிதர்...


கடந்த ஞாயிறு இரவு ஜி- தமிழ் தொலைகாட்சியில் பிரபல நடிகரும், ஓவியரும், இலக்கிய ஆர்வலுருமான திரு சிவக்குமார் அவர்களின் நேர்காணல் ஒளிபரப்பானது. ஏனைய சானல்களில் மொக்கை நிகழ்ச்சிகளின் தொல்லையால் சானல் தாவிக்கொண்டே வந்த என் கண்கள் இந்த நேர்காணலில் நிலைகுத்தி நின்றது.
நிகழ்ச்சி முடியும் வரை விளம்பர இடைவேளையில் கூட சானல் மாற்ற எனக்கு மனது வரவில்லை. ஏன்னென்றால் நேர்காணல் நடத்திய சுதாங்கன் கேட்ட கேள்விகளும் அதற்கு சிவக்குமார் அவர்கள் அளித்த பதில்களும் அப்படி.
ஏதோ நேர்காணல் நடத்துகிறேன் பேர்வழி என்று பிறர் செய்வது போல் ரிடயர் ஆன பெரிசுகளையும், கத்து குட்டிகளையும், கூட்டி வந்து ஆடம்பரமான செட்டில் உக்கார வைத்து நீங்க முதல்ல எப்போ சூச்சா போனீங்க ? எங்க பிகர்வெட்டி உதவாங்க நீங்க? என்பது போன்ற மில்லியன் டாலர் கேள்விகளை கேட்டு முதுகு சொரிந்து விடாமல், ஒரு பண்பட்ட மனிதரிடம் என்ன கேள்விகளை கேட்டல் என்ன பதில் வரும் அதனால் இந்த சமூகத்திற்கு எதாவது உபயோகம் உள்ளதா? என்று நேர்த்தியாகவும் , நறுக்கு தெரித்தார் போன்றும் கேள்விகள் வந்தன.
அதற்கு சிவக்குமார் அவர்கள் கூறிய பதில்கள் கனல் தெறித்து வந்தன. உண்மை எப்போதும் சுடும் என்பார்கள் அது உண்மைதான். அவர் கூறிய பதில்கள் அத்தனனயும் உண்மை. அதனால் தான் எந்த ஒரு எக்ஸ்ட்ரா சைடு பிட்ட்டிங்கும் இல்லாமல், பிரம்மாண்டம் இல்லாமல், "கூட சேர்ந்து கூழ்" குடிப்பதற்கு இரண்டு ஜால்ராக்கள் இல்லாமல், "என்னை பார் எனழகை பாரென்று ஆடை வுடுதிய, கேள்வி(?) கேட்கும் குப்பாயி" இல்லாமல் இந்த நிகழ்ச்சி மனதில் ஒரு மாற்றத்தையே உண்டாகியது எனலாம்.
மனிதர் தான் வாழ்க்கையில இனி ஒளித்து மறைப்பதற்கு எதுவும் இல்லை என்று திறந்த புத்தக மாக பேசினார். ஒரு மனிதன் சமூகத்தின் சந்தியில் நிர்வாணமாக நிற்பதற்கு கூட தயக்கம் கூடாது, வாழ்கை நெறிமுறைகளை வகுத்துக்கொண்டு அதன் படி பிறழாமல் வழ்ந்துவந்தால் இத்து நிச்சயம் சாத்தியம் என்று உணர வைத்தார்.
நீங்கள் சம்ம்பாதிக்க தெரியாதவரா? என்ற கேள்விக்கு, தான் நடித்த "அன்னக்கிளி" ஆட்டுக்கார அலமேலு" "பத்திரகாளி" போன்ற சில்வர் ஜூப்ளி படங்கள் தன்னால் மட்டுமே ஓடவில்லை அந்தந்த படங்களில் இருந்த தனிச் சிறப்புகள் தான் அதற்க்கு காரணம் என்று சொன்னார். "ஆட்டு கார அலமேலு படம் ஒரு ஆட்டிர்க்காகத்தான் ஓடியது" என்று சொன்ன போது மனது நெகிழ்ந்தே விட்டது. இன்று ஒரு படம் ஹிட்டானாலும் கர்வத்தின் உச்சியில் ஏறிக்கொண்டு டைரக்டரையே டைரக்ட் செய்யும், வூதியத்தை பலமடங்கு உயர்த்தி கொள்ளும் சில அரை வேக்காடுகளுக்கு சவுக்கடி கொடுப்பது போல் இருந்தது.
மேலும் பணம் சம்பாதிப்பது மட்டுமே வாழ்கை இல்லை என்றும், ஓரளவிற்கு மேல் நிறைவு கண்டு தன்னால் இயன்றதை சமூக பொறுப்புடன் செய்து வாழ்வதே வாழ்கை என்றும் கூறினார்.
அதன் படியே தான் இன்றைய சினிமா சூழ்நிலை தனக்கு உகந்தது அல்ல என்று தான் நல்ல நிலைமையில் இருக்கும் போதே நடிப்பில் இருந்து விலகி விட்டேன் என்று கூறினார்.
இதை கேட்ட பின், எழுபது வயது வரை பேத்திகளுடன், அந்நாளில் டூயட் "பாடிய", மற்றும் இந்நாளில் "பாடிக்கொண்டு இருக்கும்" "இளம்" ஹீரோக்களின் நினைவு நமக்கு வர தவற வில்லை.
வரும் காலங்களில் கம்பனை நன்கு பயின்று அதை அடுத்த தலை முறைக்கு ஏற்றார் போல் எளிதில் புரியும் படி வழங்கப்போகிறேன் என்று கூறினார். உண்மையிலேயே மிகவும் நல்ல முயற்சி. அதில் அவர் மிகச் சிறந்த வெற்றியும் பெற்று வருகிறார் என்பது நம் கண் கூடு..
தன் பிறந்த ஊரைபற்றியும், தான் வளர்ந்த விதம் , ஆட்டு சாணம் வாரியத்தில் இருந்து, தந்தை முகம் கானது வளர்ந்தது முதல் அனைத்தையும் குறிப்பிட்டார்.
ஒரு கட்டத்தில் தன் தாயை பற்றி குறிப்பிடும் போது வார்த்தைகள் வராமல் கண்கலங்கி விட்டார்.
தனக்கு மறுபிறவி நம்பிக்கை இல்லை எனினும் பிறந்தால் தமிழனாகத்தான் பிறப்பேன் என்று சொன்னபோது .. நம் கண்கள் குளமாக தவறவில்லை.
தான் வரைந்த ஓவியங்களை குறைசொல்ல எந்த ஒவியாராலும் முடியாது என்று சொன்ன போது அவருடைய தன்னம்பிக்கை மிளிர்ந்தது.
மிகுந்த சிரமங்களுக்கு இடையே அவர் போராடி இந்த இடத்தை அடைந்தாலும் பண்பட்ட அவருடைய பேச்சும்.. வெறும் பேச்சோடு நில்லாமல் அதை நடைமுறை வாழ்வில் அவர் கடை பிடிக்கும் விதமும், இன்றளவும் தன் தாயையும், தாய்மண்ணையும், தன் தொழிலையும் நேசிக்கும் இந்த அறுபத்தி ஏழு வயது இளைஞர் பிரமிக்க வைக்கிறார்.
நிக்ழ்சியின் ஆரம்பத்தில் ஒரு நடிகரின் பேட்டி என்ற உணர்வோடு பார்க்க ஆரம்பித்த நான், நிறைவையும் போது நம் வீட்டில் ஒருவர் அங்கே பேசிக்கொண்டு இருக்கிறார் என்று உணர்ந்தேன்.
ஒருவர் உண்மையை மட்டுமே பேசும் போது தான் நமக்கு அந்த உணர்வு வரும்! உண்மைதானே???