Showing posts with label வால்பாறை.... Show all posts
Showing posts with label வால்பாறை.... Show all posts

Sunday, August 23, 2009

புவியில் ஒரு சொர்க்கம் வால்பாறை

இந்த வாரம் நாம பாக்க போற இடம் வாகமலை வியு பாயிண்ட். சாதரணமா வால்பாறைக்கு போற எல்லாருமே இங்க போவங்கள்ன்னு சொல்ல முடியாது. ஏன்னா வல்பாரைல இருக்கவங்களே இந்த இடத்துக்கு போகறதுக்கு அவ்வளவா ரிஸ்க் எடுக்க மாட்டங்க. ஆனா ஒரு நல்ல கைடு நம்ம சாலமன் மாதிரி யாரவது அமஞ்சாங்கன்ன நம்பி போலாம்.இந்த இடம் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 4000 அடி வுயரம் இருக்கும். ஐந்தே இடத்தில இருந்து நீங்க கீழ பாத்தீங்க ஒரு ஒருமையான அழகான பள்ளத்தாக்கு பிரதேசம் தெரியும். ஆனா ரொம்ப எச்சரிக்கை அவசியம். ஏன்தெரியுமா? நாம நிக்கற எடமே ஒஉறு வழுக்கு பாறை.

அங்க இருந்து விழுந்தோம் அவ்வளவு தான். உங்க பேரை சொல்லி அப்படியே பால் வூதிட்டு போய்டனும் .எலும்பு கூட தேராது. என்னடா இவன் இப்படியெல்லாம் சொல்ரன்னேணு தப்ப எடுத்து காதீங்க மக்களே. எல்லாம் ஒரு எச்சரிக்கை தான். சரி இவ்ளோ ரிஸ்க் எடுத்து எடுக்கு அங்க போகணும் நு நீங்க கேக்கலாம். சொர்க்கம் எப்படி இருக்கும்னு யாரும் பார்த்து இருக்கமாட்டோம். ஆனா இங்க போனா சொர்க்கம் கூட இப்படி இருக்குமானு நீங்க யோசிப்பீங்க..

உங்கள் கால் அடியில் ஒரு பெரும் பள்ளத்தாக்கு. எதிரே ஒரு வுயரமான மலைத்தொடர்.. அந்த மலைதொடர்ல இருந்து உற்பத்தி ஆகிற எண்ணற்ற அருவிகல்னு பாக்க பாக்க கண்கள் சலிக்கவே சலிக்காது. நீங்க கவிஞரா இருந்த எழுதுவீங்க ஒரு நூறு கவிதை.

இங்க அடிக்கும் பாருங்க ஒரு காத்து சும்மா ஆளயே தூக்கிட்டு போய்டும். அந்த காதுல மேகங்கள் மேலே கீழ போய் துள்ளி விளையாடும்.அழகே தனி..
நல்ல வெளிச்சமா இருக்கும். திடீர்னு ஒரு நிமிசத்துல மேகங்கள் மொத்த பிரதேசத்தையும் மூடிடும்.. எதிர்க்க இருந்த மலை, கீழ இருந்த பள்ளத்தாக்கு எல்லாமே மறைஞ்சிடும். இதெல்லாம் சில நிமிஷந்தான். திரும்பவும் மேகங்கள் விலகி வெளிச்சமாயிடும். உங்கள் கண்களை உங்களாலேயே நம்ப முடியாது.
இயற்கை உங்களை ஜாலம் காட்டி திணறடிக்கும்.

ஒரு ஆச்சர்யமான விஷயம் என்னன்னா அந்த அடர்ந்த காடுகள் உள்ள பள்ளதாகுல இருக்க பழங்குடியினர் வீடுகள் தான். இவங்க எப்படி அங்க வீட்ட கட்னாங்க? ஏன் அங்க இருகாங்க? ஒரு அவசரம்னா எப்படி வெளிய வருவாங்க? இவங்களோட வெளிவுலக தொடர்புகள் எப்படி? சத்யமா மண்டைய பிச்சிபீங்க!

ஆனாலும் எனக்கு இவங்கமேல் போராமைங்க. இப்படி ஒரு சொர்கத்துல வாழ்ந்துட்டு இருகாங்கலேன்னு! படத்த பாருங்க உங்களுக்கே தெரியம்..

படிச்சிட்டு கண்டிப்பா உங்க கருத்த பதிவு பண்ணுங்க ..