Thursday, September 17, 2009

இந்தியா- என் தேசமா ?? (அல்லது) எனக்கு என்ன ஆச்சு?
இந்தியா- என் தேசமா ?? (அல்லது) எனக்கு என்ன ஆச்சு?

சமீப காலமாக எனக்குள்ளே ஒரு மாற்றத்தை நான் உணர தொடங்கி இருக்கிறேன். இது என் நினைவு தெரிந்த நாள்களில் இருந்து ஒரு கடந்த ஆறு மாதம் முன்பு வரை கூட இந்த மாற்றம் வரும் என்று நான் நினைத்து கூட பார்த்ததில்லை. ஆனால் வந்து விட்டது. இந்த மற்றதை யாரும் எனக்கு போதிக்க வில்லை . யாரும் வற்புறுத்தி ஏற்க சொல்ல வில்லை. நானே கூட இப்படி மாற வேண்டும் என்று முயலவில்லை.

இருந்தாலும் என்னக்குள் அது புகுந்து விட்டது. ஆனால் நான் இந்த மாற்றத்தை வெறுக்க வில்லை. இது நியமமான ஒரு தன்மானமுள்ள..ஒரு இனப்பற்றுள்ள..ஒரு யுக வரல்லாறு கொண்ட ஒரு இனத்தில் பிறந்த.. கடல் கடந்து போர் செய்து பர தேசங்களைஎல்லாம் ஒரு குடைக்குள் கொண்டுவந்த...வடக்கில் படை கொண்டு சென்று இமயத்தில் கொடி நாட்டிய.. மனனர்கள் ஆண்ட மண்ணில் பிறந்தவன்.. ஆதலால் எனக்குள்ளும் ஏதோ ஒரு மூலையில் ஒட்டிக்க்கொண்டிருக்கும் ரௌத்ரத்தின் வெளிப்பாடு.

ஆம் என்ன மாற்றம் அது?- என் தேசத்தின் மீது - எங்களை ஆள்பவர்களின் மீது ஏற்பட்டிருக்கும் பற்றின்மை ... ஒரு சலிப்பு.. எவன் எப்படி நாசமா போனால் என் ...யிருக்கு என்ன எனற எண்ணம்.

முன்பெல்லாம் பள்ளியில் தினந்தோறும் கடனுக்காக தேசிய கீதம் பாடும் போதே ஏதோ ஒன்று மனதிற்குள் சிலிர்க்கும். என் தேசத்தை நினைத்து. குடியரசு தின அணிவகுப்பை பார்க்கும் போதெல்லாம் பெருமிதம் தொண்டை வரை அடைக்கும். ரோமங்கள் சிலிர்க்கும். கண்களில் நீர் தாரை வார்க்கும். தேசத்திற்காக உண்மையிலே தியாகம் செய்தவர்களை பற்றி நான் படிக்கும் போது என்னை அறியாமலேயே நான் சிந்திய நீர் துளிகள் புத்தகங்களின் பக்கங்களை நனைத்து இருகின்றன. கோடி கோடியாய் சம்பாதிபதர்க்காக இந்தியா என்னும் போர்வயை போர்த்திக்கொண்டு விளையாடுபவர்களை கூட தலையில் தூக்கி வைத்து ஆனந்த தாண்டவம் ஆடி இருக்கின்றேன்.

ஆனால் இன்று.. இந்தியாவில் சீனா ஊடுருவல்! - " எனகென்ன வந்துச்சி?"

இந்திய மாணவர்கள் ஆஸ்த்ரேலியாவில் இன வெறியினால் தாக்க பட்டனர்.! - "ஓ இதுக்கு பேர்தான் இன வெறியா? " அப்ப லச்சம் பேரை துடிக்க துடிக்க கொல்றது கிடையாதா?"

இன்றைக்கு இந்திய சுதந்திர தினம்!- இந்தியாவின் சாதனைகள்- பிரதமர் செங்கோட்டையில் பிரதமர் கொடியேற்றி உரை ஆற்றினார் - " ஆதித்யாவுல வடிவேலு காமெடி போடறாங்கப்பா! சேனல மாத்து நல்லா இருக்கும்.!

இந்திய இறையாண்மையை நாம் காப்பாற்ற வேண்டும் - தொங்க லு லு அறிக்கை- " வாலிப வயோதிக அன்பர்களே! - உங்கள் ஆண்மை குறைவிற்கு பரம்பரை மருந்து" எங்களிடம் மட்டும் தன் உள்ளது - யாரிடமும் ஏமாற வேண்டாம் - சேலம் டாக்டர்! .

ராகுல் காந்தி தமிழகம் வருகை , இளைஞர்கள் காங்க்ரசில் சேரவேண்டும்!- " அப்படியே உங்களை உங்கள் உணர்வுகளை - இனத்தை புழுவை போல் நசுக்குவோம்- நீங்கள் இறையாண்மை என்னும் மயக்க மருந்தை உண்டு - அந்த மயக்கத்திலே இதையெல்லாம் தாங்கி கொள்ளுங்கள் - இங்கே தமிழகத்தில் இருக்கும் சில கோடாலி கம்புகளும் எங்களை, கண்மூடி, கால் வருடி வணங்கும்".

வட மாநிலங்களில் கடும் வறட்சி! - "போங்கடா போக்காத பசங்களா"

இன்னும் என்னெனமோ இது போல தொன்றுகிறது என் மனதில் ! - நான் ஏன் என் சொந்த நாட்டின் மேலேயே நம்பிக்கை இல்லாமல் இருக்கிறேன்? - இது மனநிலையின் பிழற்சி தானே ? என்னகு பைத்தியம் தானே பிடித்திருக்கிறது? நீங்களே சொல்லுங்களேன்.