Sunday, October 18, 2009

நாராயணா இந்த கொசுத்தொல்லை தாங்கமுடியாலடா!

நாராயணா இந்த கொசுத்தொல்லை தாங்கமுடியாலடா! டேய் சுனாமி மண்டையா! இந்த தீபவாளி பொங்கல் புது வருசம்னு வந்தா போதும் எங்கர்ந்து தான் வர்ரானுகநேனு தெரியல, ஒரு சிகப்பு கலர் ரிசெப்சின் சேரு, ஆறு பிளாஸ்டிக் சேரு வாடகைக்கு வங்கிக்க்னு வந்து எதாவது சத்ரத்துல போடுகினு நான்தான் நடுவரு, நான்தான் நாட்டாமைன்னு டைட்டில் போட்டுகினு உக்காந்து கிரான்னுகோ!

இத வேடிக்க பாக்க வேற ஊர்ல வேல வெட்டி இல்லாம ஒரு நூறு பேரு,இல்ல இல்ல சில இடத்துல ஆயிரம் பேரு கூட சத்திரம் லெவெலுக்கு ஏத்தா மாதிரி குடும்பத்தோட வந்து குந்திகிரனுங்கோ! வெளங்காத வெண்ணைங்க! மைக்க புடிச்சி எவென் எத சொன்னாலும் சரி இருமினா கூட சரி இன்னவோ இவனுங்க மட்டும் பயங்கரமா புரிஞ்சிகின புத்தி சாலி மாதிரி விழுந்து விழுந்து சிரிப்பனுங்கோ! அப்ப தானே டிவியில நல்லா குலொஸப்ல காட்டுவானுங்கோ!

நாளும் கிழமையும் அதுவுமா இந்த கரடி,காண்டாமிருக மூஞ்சியெல்லாம் பாத்து நம்மளும் காலங்காத்தால காண்டாவலாம்!

பண்டிகை அதுவுமா எதாவது ஒரு டிவி பாக்க முடியுதா இவனுங்கலாலே ? எந்த சானலும் பாக்க முடியல .. பட்டிமண்டபம்னு டைட்டில் போட்டு டிவிக்கு டிவி சாவடிகிரானுங்கோ!

அதுவும் இவனுங்க தலைப்பு "தண்ணி புடிக்க சிறந்தது அண்டாவா? குன்டாவா?" குடும்பத்துல குழப்பம் பண்றது மாமியாரா? மருமகளா? கற்பில் சிறந்தவள் ஷக்கீலாவா? ப்ரதீபாவா? மனைவியிடம் அடிக்க சிறந்தது சோப்பா? சொம்பா? இப்படி எல்லாம் தலைப்ப வச்சி நல்லா இருக்க குடும்பத்துல கூட நல்ல நாளும் அதுவுமா சண்ட மூட்டி வுற்றுவானுங்கோ!!

இப்படி நாட்டுக்கு தேவையான நல்லா பிரச்சினைகளை அலசி ஆராய்ந்து, பிச்சி பீராஞ்சி, கடைசில நடுவர்னு ஒக்காந்து இருக்குற ஒரு தேங்கா மண்டையன் ஒரு தீர்ப்ப சொல்லுவான்!

அதை அப்படியே இந்தியன் பீனல் கோட் செக்சன் 88cla அமேண்ட்மெண்டு போட்டு சட்டமாக்க வேண்டியதுதான்! போக்கத்த பெர்சுங்க , இதுங்க சொல்ற தீர்ப்ப இதுங்க வீட்லையே மதிக்காதுங்க! இதுல ஊர்ருக்கு உபதேசம் வேற!

மனசுல பெரிய சுப்ரிம் கோர்ட் ஜட்ஜ் நு நினைப்பு!

இதுங்களுக்கு தகுதியே ஒரு பத்து பட்டிமன்றத்துல வாதாடி கிழிசிருக்கணும் அவ்ளோதான்.
எப்படி கீழ் கோர்ட்ல வாதாடி வாதாடி வாத திறமையால மேல் கோர்ட்டுக்கு ஜட்ஜ் ஆவங்களோ அப்படிதான்! அப்பப்ப வாங்க! வாங்க! ஆஹா! ஓஹோ ! பிரமாதம் ! பின்னிடாருயா! அவுக நம்மாளுக! இந்தமாதிரி வார்த்தைகளை சொல்லி ஹி ஹி நு லூசுமாதிரி சிரிக்கணும்!

அப்புறம் தீர்ப்பு சொலும் போது முதல்ல லைட்டா காமெடியா ஆரம்பிச்சு ஒரு க்ரூப்ப சப்போர்ட் பண்றமாதிரி பண்ணி அப்புறம் தடால்னு சீரிஎஸ் ஆகி அந்த குரூப் தன் கிரிமினல் கேங்க்னு, டிக்ளர் பண்ணி தடால்னு இன்னொரு க்ரூப்கு சாதகமா தீர்ப்ப சொல்லிடனும்! அவளோதான் நீங்க தான் நடுவர்! (கவலை படாதீங்க எவனும் நாட்டாமை தீர்ப்ப மாத்துன்னு கத்த மாட்டான்! ஏன்னா எவனும் கடைசீ வரைக்கும் பாத்தா தானே? ).

இவங்க இப்படினா வாதாடிகள் தகுதி இதுதான்!

நடுவர் அவர்களே நு ஆரம்பிச்சு எதாவது ஒரு பிட்ட போடம்னும் ! அப்புறம் வூட்ல எம்புள்ள என்னையே எடகுடமா கேள்விகேட்டு களாய் கிறான்! எம்பொண்டாட்டி ரொம்ப புத்திசாலி! நாந்தான் அவளுக்கு பொடவ துவச்சி போடுவேன்னு வீட்ல நடக்ரத எல்லாம் வெக்கமில்லாம மேடைல சொல்லி கைதட்டல் வாங்கணும்! அப்புறம் எதாவது ஜோக் புக்,வார இதழ் இதுல்ல எல்லாம் வர ஜோக்ஸ ஒன்னு விடாம மனப்பாடம் பண்ணி சொந்தமா தயாரிச்ச மாதிரி அப்பப்ப டைம் பாத்து அவுத்து விடனும்! எதாவது பாட்ட கழுதை குரலில் பட தெரிஞ்சா ரொம்ப நல்லது!

முக்கியமான ஒன்னு நீங்க மொக்க பேரசிரியராவோ இல்ல பேங்க் ஊழியரவோ இருக்கனும் அப்பதான் நீங்க பட்டிமன்ற மைக் பிடிக்கவே தகுதி பெற்றவர்!

அப்புறம் பார்வையாளர்க்கு நு ஒரு தகுதி இருக்கு! வேல வெட்டி எதுவும் இருக்க கூடாது! எப்படா எவனாவது நம்மள கூப்டுவான் குடும்பத்தோட போய் உக்காந்து வேடிக்கை பாக்கலாம்னு அலையனும்! நல்லா முப்பத்தி ரெண்டு பல்லையும் காட்டி கேக்க பெக்கன்னு சிரிக்கணும்!.

டேய் தயவு செஞ்சி சொல்றேன் இந்த பட்டி மன்ற தொல்லைய ஸ்டாப் பண்ணுக டா ! இன்னும் எத்தனை வருசத்துக்கு இதையே அறைபீங்க? வரவர அம்மாவாசை பௌர்ணமி வந்தாகூட எங்கடா பட்டி மன்றம் போட்டுடு வாங்கலோன்னு பயமா இருக்குடா!

டேய் நாராயணா இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலடா எதாவது மருந்தடிச்சி கொல்லுங்கடா!

Wednesday, October 7, 2009

தமிழகத்தின் அவசியமான பிரச்சினை !


தமிழகத்தின் அதி அவசியமான பிரச்சனை !இந்த கீர்தனாரம்ப காலத்திலே இந்த லோகத்திலே ஒரு மிக அத்யாவசியமான ஒரு பிரச்சனை ஒரு குழப்பம் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது! இதனால் தமழ் நாட்டில் உள்ள பெண்டுகள் பிள்ளைகள் புருஷர்கள் எல்லோரும் மிகவும் விசனம் கொண்டு மிகவும் கலகத்திலே பீதி அடைந்து உள்ளார்கள்.பிள்ளை கள் படிப்பதை (பாட புத்தகங்களை) நிறுத்தி விட்டார்கள், புருஷர்கள் ஸ்த்ரீகளை நோக்குவதையும் அவர்களிடம் அபிலாசை கொண்டு லோ லோ என்று அலைவதையும் நிறுத்தி விட்டார்கள்! ஸ்த்ரீகள் மிகவும் ப்ப்ரையதனம் கொண்டு சதா சர்வகாலமும் கண்ணீரும் கம்பலையுமாக தங்கள் நோக்கும் மகா தொடர்களை கூட காண்பதை கூட மறந்தே விட்டார்கள்!ஜனங்கள் நேருக்கு நேர் தெருவிலே கண்டால் கூட தங்கள் சேம லாபங்களை விசாரிப்பதை கூட லக்ஷியம் செய்யாமல் அவாளுக்கா இந்த அவலநிலைமை லோகத்திலே இப்படியும் கூட நடக்குமா ? பகவானே என்ன கொடுமை இது ?கலியுகத்திலே தலை வலிக்குதே என்று பரஸ்பரம் விசனம் கொண்டு விசாரிகின்றனர்.அவ்வளவு என்? தமிழ் நாட்டு ராஜா ஸ்ரீ ல ஸ்ரீ தமிழ் காத்த நல்லோன் (தமிழ் ஜனங்களை அல்ல) தர்பாரில் கூட ஆடல் (?) வல்ல அணங்குகள் எல்லாம் முறை இட்டு கண்ணீர் சிந்தி குய்யோ முறையோ என்று ஓலமிட்டு அழுது புலம்பி தங்களை காக்க பிரார்த்தித்து கொண்டனர்!தமிழ் நாட்டிலே வெளியாகும் சஞ்சிகைகள் எல்லாம் அண்டை மாநிலங்களில் வெள்ளம் ஓடினாலும் சரி ஊரே அழிந்தாலும் சரி அதையெல்லாம் ஒரு சிறு பொருட்டேனும் மதியாமல் அலக்ஷியம் செய்து வரி விளம்பரம் வரும் பக்கத்திலே பெட்டி செய்தியாக தான் போடுகிறார்கள்.

தலைப்பு செய்தியே நம் காலக்ஷேப தலைப்பு தான்!அது என்ன பிரக்ஷினை ? என் இத்தனை ஆர்வம் ? நரகசுரன் பூமியலே மீண்டும் அவதரித்து விட்டானா ? தேவர்கள் மீண்டும் பாற்கடலை கடைய மத்து தேடி திருமாலை வேண்டி புறப்பட்டர்களா? இல்லை கத்தரிக்காய் ஒரு வெள்ளிக்கு ஒரு வீசம் வழங்க தமிழ் கத்த நல்லோன் ஆணை இட்டு விட்டாரா?அல்லது தனக்கு பிறகு இளைய இளவரசன் தற்போதைய சேனை தலைவன் குறிஞ்சி குசும்பனும் , மூத்தவன் வணங்க முடியும் நாட்டை ஆளாமல் முடியாட்சி மறைந்து குடி (?) ஆட்சி மலர அருள் புரிந்து விட்டாரா?இப்படியாக எல்லாம் சத்தியமாய் இருக்காது என்று பக்த கோடிகளுக்கு நன்றாகவே இந்நேரம் பரிக்ஷயம் ஆகியிருக்கும்.

விஷயம் என்னவென்றால் இதுகாரும் பொது ஜனங்களுக்கு கலை சேவை புரிந்து காலாவதியான "புவனேஷ்வரி அம்மை" தன் மீது பிரியம் கொண்ட கலா ரசிக மனிகளுக்காக இஷ்ட ப்ராப்தி "பொது சேவை" செய்து இன்று காவல் துறை யினராலே தடுத்தாட்கொள்ளப் பட்டுள்ளார் ..

இது விஷயமாகவே அவனியிலே இத்துணை நிகழ்வுகளும் நடந்தேறி வருகின்றன.

இதை விட லோகத்திலே வேறு அத்யாவசியமான வேறு பிரச்சினைகள் இல்லாததால் இதையே மக்களனைவரும் த்யானித்து மோக்ஷ பிரார்த்தனை செய்கிறார்கள் .

நானும் அம்மையாரின் புகழ் பாடி இக பர சுகம் வேண்டி இந்த காலக்ஷேப நிகழ்ச்சியினை நிகழ்த்தி உள்ளேன்.

இதை கேட்ட யாவரும் தினந்தோறும் காலை மாலை அம்மையாரின் புகழை பாராயணம் செய்து இதை கேட்க்காத அனைவரிடமும் பரவச்செய்து

"இல்லற சுகம்" பெற்று மோக்ஷ வீடு பெற்று இந்திரன் சபையிலே ரம்பை ஊர்வசி காபரே நடனத்தை கண்டு கழிக்க எல்லாம் வல்ல "மாமா" வெற்றிலை பெட்டி செல் பொன் பிரிய ஜோல்நாலீச்வரனை பிரார்த்தித்து கொள்கிறேன்.

இந்த கலக்ஷேப நிகழ்ச்சி சீரும் சிறப்புமாக நடந்தேற பேருதவி செய்து நிகழ்ச்சிக்கு வந்த அனைவருக்கும் ஆண் பெண் பேதம் பாராது "பாகெட்" "உரைகள்" தாரளமாக வழங்கிய "சங்கு" மார்க் காண்டம் (சுந்தர காண்டம் அல்ல) கும்பினி யார்க்கும் அவர்கள் பனி சிறக்க வியாபாரம் பெருக்க வேண்டிக் கொள்கிறேன்.

நம மாருதி வண்டியே நம ஹ

ஹர ஹர ஐடேமேச்வரி !

Sunday, October 4, 2009

வந்தாச்சு வோல்டு தமிழ் மாநாடு - தீந்தாச்சு தமிழர்களின் துயரங்கள் ........

வந்தாச்சு வோல்டு தமிழ் மாநாடு - தீந்தாச்சு தமிழர்களின் துயரங்கள் ........
உலக தமிழ் மக்களே உலகவரலாற்றிலேயே இதுவரை யாருமே காணாத , மிக பிரமாண்டமான புத்தம் புதிய ஒரு மெகா ஹிட் மாநாடு மிகவும் அவசியமான இந்த வேளையிலே நடை பெற இருக்கிறது. உங்கள் கலைஞர் டிவியில் காண தவறாதீர்கள்.
இந்த மாநாட்டில் நடைபெற விருக்கும் நிகழ்ச்சிகள்..
ஆராய்ச்சி பிரிவு
இலங்கை தமிழரை காப்பாற்ற எடுத்த முயற்சிகளின் பட்டியல் என்று 1950 லிருந்து நடந்த சப்பை நிகழ்வுகளையே பட்டியல் இட்டு அரைத்த மாவையே திரும்ப அரைத்து மாவு வீணாகி மக்கள் உசாராகி எல் கே ஜி பையன் கூட ரிபீடாக தான் அளிக்கும் அறிக்கையை ஒபிப்பதால் புதிதாக எதாவது கதை சொல்லலாமா என்று கதை காண வரலாற்று நிகழ்வுகளை தேடும் தொன் தமிழர் ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்பித்தல்.
உரையாடல், கலந்தாய்வுப் பிரிவு
மேற்கண்ட பிரிவுகள் அனைத்திலும் கழக குடும்ப பழைய, புதிய, லேட்டஸ்ட் அண்ட் அப் கமிங் கவிதாயினிகள், சொல்லாடல் வல்லுனர்கள் கலந்து கொண்டு மாநாடு நாயகனை தங்கள் வாய் ஜாலங்கள் காட்டி மகிழ் வித்து அடுத்த எலேக்க்சனில் பா. உ , ச ம உ .. முதலிய பதவிகளை பெறுவர்...
கவிதை பிரிவு...
வழக்கம் போல் மேற்கண்ட மங்கள கோஷ்டியில் பாதி உறுப்பினர்களும் , டை மண்டு, ஜாலி, கவி கோயன், முதலான வெட்டி கவிஞர்களும் போனான் வந்தான் போன்ற வளரும் கவிஞர்களும் வழக்கம் போல் கை தாளம் (ஜால்ரா) தட்டி மங்களம் பாடுவார்கள்!
நீங்களும் வாயை பிளந்துகொண்டு கேட்கலாம்.
விருது வழங்குதல்
வோல்டு சாதனையாளர் விருது முதல் லோக்கல் சோதனையாளர் விருது பெற்ற ஒருவருக்கு மேலும் பல விருதுகளை வழங்கி அவரை குஷி படுத்துதல் . மற்றும் மிச்ச சொச்ச குட்டி குட்டி விருதுகளை மலேசியா பெருசுக்கோ , பாரிஸ் பெருசுக்கோ பிட்ச்சை போடுதல்! ( என்ன ஒரு ராஜ தந்திரம்! அப்ப தானே நம்ம புகழ் பாரெல்லாம் (டாஸ்மாக் பார் அல்ல) பரவும்!)
ஆனால் கல்தோன்றி மண்தோன்றா காலத்தில் இருந்தே யாரவது மொளகாயை அரைக்க தலையினை காட்டி கொண்டிருக்கும் தமிழ் மக்களே! இந்த வேர்ல்ட் மாநாடிற்க்கும் ... உங்கள் அன்றாட பிரச்சனைகளான விலை வாசி உயர்வு தம்மா தூண்டு எலுமிச்சம் பழம் அஞ்சு ரூபா (வாங்கி தலைல கூட தேய்க்க முடியாலங்கோ!!) .. முள்வேலிக்குள் நாடாண்ட தமிழினம்,
தண்ணீர் இல்லாமல் சாகும் விவசாயம் .. முதலான பைசா பெறாத விசயங்களுக்கும் தொடர்பு இருப்பதாக நீங்கள் நம்பினால் அதற்கு கம்பனி பொறுப்பு அல்ல!

Thursday, September 17, 2009

இந்தியா- என் தேசமா ?? (அல்லது) எனக்கு என்ன ஆச்சு?
இந்தியா- என் தேசமா ?? (அல்லது) எனக்கு என்ன ஆச்சு?

சமீப காலமாக எனக்குள்ளே ஒரு மாற்றத்தை நான் உணர தொடங்கி இருக்கிறேன். இது என் நினைவு தெரிந்த நாள்களில் இருந்து ஒரு கடந்த ஆறு மாதம் முன்பு வரை கூட இந்த மாற்றம் வரும் என்று நான் நினைத்து கூட பார்த்ததில்லை. ஆனால் வந்து விட்டது. இந்த மற்றதை யாரும் எனக்கு போதிக்க வில்லை . யாரும் வற்புறுத்தி ஏற்க சொல்ல வில்லை. நானே கூட இப்படி மாற வேண்டும் என்று முயலவில்லை.

இருந்தாலும் என்னக்குள் அது புகுந்து விட்டது. ஆனால் நான் இந்த மாற்றத்தை வெறுக்க வில்லை. இது நியமமான ஒரு தன்மானமுள்ள..ஒரு இனப்பற்றுள்ள..ஒரு யுக வரல்லாறு கொண்ட ஒரு இனத்தில் பிறந்த.. கடல் கடந்து போர் செய்து பர தேசங்களைஎல்லாம் ஒரு குடைக்குள் கொண்டுவந்த...வடக்கில் படை கொண்டு சென்று இமயத்தில் கொடி நாட்டிய.. மனனர்கள் ஆண்ட மண்ணில் பிறந்தவன்.. ஆதலால் எனக்குள்ளும் ஏதோ ஒரு மூலையில் ஒட்டிக்க்கொண்டிருக்கும் ரௌத்ரத்தின் வெளிப்பாடு.

ஆம் என்ன மாற்றம் அது?- என் தேசத்தின் மீது - எங்களை ஆள்பவர்களின் மீது ஏற்பட்டிருக்கும் பற்றின்மை ... ஒரு சலிப்பு.. எவன் எப்படி நாசமா போனால் என் ...யிருக்கு என்ன எனற எண்ணம்.

முன்பெல்லாம் பள்ளியில் தினந்தோறும் கடனுக்காக தேசிய கீதம் பாடும் போதே ஏதோ ஒன்று மனதிற்குள் சிலிர்க்கும். என் தேசத்தை நினைத்து. குடியரசு தின அணிவகுப்பை பார்க்கும் போதெல்லாம் பெருமிதம் தொண்டை வரை அடைக்கும். ரோமங்கள் சிலிர்க்கும். கண்களில் நீர் தாரை வார்க்கும். தேசத்திற்காக உண்மையிலே தியாகம் செய்தவர்களை பற்றி நான் படிக்கும் போது என்னை அறியாமலேயே நான் சிந்திய நீர் துளிகள் புத்தகங்களின் பக்கங்களை நனைத்து இருகின்றன. கோடி கோடியாய் சம்பாதிபதர்க்காக இந்தியா என்னும் போர்வயை போர்த்திக்கொண்டு விளையாடுபவர்களை கூட தலையில் தூக்கி வைத்து ஆனந்த தாண்டவம் ஆடி இருக்கின்றேன்.

ஆனால் இன்று.. இந்தியாவில் சீனா ஊடுருவல்! - " எனகென்ன வந்துச்சி?"

இந்திய மாணவர்கள் ஆஸ்த்ரேலியாவில் இன வெறியினால் தாக்க பட்டனர்.! - "ஓ இதுக்கு பேர்தான் இன வெறியா? " அப்ப லச்சம் பேரை துடிக்க துடிக்க கொல்றது கிடையாதா?"

இன்றைக்கு இந்திய சுதந்திர தினம்!- இந்தியாவின் சாதனைகள்- பிரதமர் செங்கோட்டையில் பிரதமர் கொடியேற்றி உரை ஆற்றினார் - " ஆதித்யாவுல வடிவேலு காமெடி போடறாங்கப்பா! சேனல மாத்து நல்லா இருக்கும்.!

இந்திய இறையாண்மையை நாம் காப்பாற்ற வேண்டும் - தொங்க லு லு அறிக்கை- " வாலிப வயோதிக அன்பர்களே! - உங்கள் ஆண்மை குறைவிற்கு பரம்பரை மருந்து" எங்களிடம் மட்டும் தன் உள்ளது - யாரிடமும் ஏமாற வேண்டாம் - சேலம் டாக்டர்! .

ராகுல் காந்தி தமிழகம் வருகை , இளைஞர்கள் காங்க்ரசில் சேரவேண்டும்!- " அப்படியே உங்களை உங்கள் உணர்வுகளை - இனத்தை புழுவை போல் நசுக்குவோம்- நீங்கள் இறையாண்மை என்னும் மயக்க மருந்தை உண்டு - அந்த மயக்கத்திலே இதையெல்லாம் தாங்கி கொள்ளுங்கள் - இங்கே தமிழகத்தில் இருக்கும் சில கோடாலி கம்புகளும் எங்களை, கண்மூடி, கால் வருடி வணங்கும்".

வட மாநிலங்களில் கடும் வறட்சி! - "போங்கடா போக்காத பசங்களா"

இன்னும் என்னெனமோ இது போல தொன்றுகிறது என் மனதில் ! - நான் ஏன் என் சொந்த நாட்டின் மேலேயே நம்பிக்கை இல்லாமல் இருக்கிறேன்? - இது மனநிலையின் பிழற்சி தானே ? என்னகு பைத்தியம் தானே பிடித்திருக்கிறது? நீங்களே சொல்லுங்களேன்.

Sunday, September 6, 2009

உணர்வுகளின் வெளிப்பாடு - விடுமுறையா?

உணர்வுகளின் வெளிப்பாடு - விடுமுறையா?


சமீப காலமாக எதெற்கெடுத்தாலும் விடுமுறை அறிவிக்கும் பழக்கம் தமிழக அரசால் கடை பிடிக்கப்படுகிறது. இட ஒதுக்கீடு பிரச்சனையா - அரசாங்க வேலை நிறுத்தம். காவிரி நீர் வரவில்லையா?- அரசாங்க வேலை நிறுத்தம். ஈழத்தமிழர் படுகொலையா? - அரசாங்க பொது வேலைகள் நிறுத்தம்!. அண்டை மாநில முதல்வர் மறைவா?- அரசு பொது விடுமுறை.
வேலை நிறுத்தத்தை கண்டித்து உச்ச நீதி மன்றம் தீர்ப்பு அளித்தாலும் கூட- அரசு வூழியர்கள் தன்னார்வத்தின் மிகுதியால் பணிக்கு வரவில்லை என்ற சப்பை கட்டு வேறு!
இப்படி தடுக்கி விழுந்ததற்கு எல்லாம் விடுமுறை அளித்தால் என்றுதான் வேலை செய்வது? (அரசு வூழியர்கள் என்று வேலை செய்தார்கள் என்று கேட்கபடாது!) இதே ரீதியில் சென்றால் விடுமுறை அளிக்காததை கண்டித்து விடுமுறை வேண்டும் என்று கோரிக்கை வரலாம்.
இப்படி அளிக்கும் விடுமுறைகளினாலும், வேலை நிறுத்தங்களினாலும் என்ன பயன் வந்துவிடப்போகிறது?
காவிரியில் நம் முதல்வரின் "தம்பி" அவர்கள் அண்ணனின் வேண்டுகோளை ஏற்று காவிரியில் கடல் போல் தண்ணீர் திறந்து விட்டாரா?.. அல்லது ஈழத்தில் தமிழர்களை கொல்வதை ராக்ஷ்ச பக்ஷே நிறுத்தி விட்டாரா?
நாம் இதுவரை எத்தனையோ போராட்ட வடிவங்களை பார்த்திருக்கிறோம், ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் - உண்ணா நோன்பு- கருப்புக்கொடி ஆர்பாட்டம்- ரயில்முன் தலை வைத்து படுக்கும் வீர தீர போராட்டம்- இப்படி எத்தனயோ பல-
ஆனால் நமது வடிவேலு பணியில் சொல்வதனால் "இது புதுசாவுல இருக்கு". இந்த வேலை நிறுத்த போராட்டங்கள் யாரை திருப்தி படுத்த? எல்லோரையும் வீட்டில் முடக்கி காமெடி டிவியையும் , புதுபடங்களலையும் பார்க்க வைத்து வியாபரத்தை பெருக்கவா? அல்லது டாஸ்மார்க்கில் அதிக வருவாய் ஈட்டவா?
இதுவரை வேலை நிறுத்தம் செய்து எதாவது உருப்படியாய் நடந்திருக்கிறதா? பத்து பைசாவிற்கு கூட பிரயோசனம் இல்லை!
அண்டை மாநில முதல்வர் மறைவு வருந்த தக்கது தான். அதற்காக அரசு அலுவலகங்களில் வெட்டியாக கதை பேசும் நேரத்தில் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினால் போதாதா? (இவர்களை பேசாமல் இருக்க சொன்னால் தலை வெடித்து விடும் என்பது வேறு).
இப்போது விடுமுறை விட்டதால் துக்கத்தில் பங்கு கொள்கிறோம் பேர்வழி என்று வீட்டில் போய் Y S R அவர்கள் படத்தை மாட்டி ஒப்பாரியா வைத்தார்கள்? இல்லை துக்கம்- விடுமுறை என்று அறிவித்த முதல்வர் நேற்று முழுவதும் தமது டிவி சேனலில் "டொயிங்" "டொயிங்" என்று பிடில் வாசிக்கும் நிகழ்ச்சியை மட்டும் தான் ஒளி பரப்ப வேண்டும் என்று ஆணை பிறப்பிதாரா? கட்சி கொடி அரை கம்பத்தில் பறந்தால் நஷ்டம் இல்லையே? ஆனால் டொயிங் பிடில் வாசித்தால்? - யோசிக்க!!
ஒரு விடுமுறையால் என்ன லாபம்?-
மத்திய காங்கிரஸ் அரசிற்கு இணக்கமாக போவதாக காட்டி கொள்ளலாம்!
அரசு வூழியார்களை திருப்தி செய்யலாம். - இடை தேர்தல் பொது தேர்தல் நேரங்களில் இது உதவும்.
டாஸ்மார்க்கில் அதிக வருவாய்
மக்களை டிவி பார்க்க வைத்து காசு பண்ணலாம்.
யாருக்கு நஷ்டம் ?
நம் அனைவருக்கும் தான்!
நம்முடைய வரிப் பணத்தில் சம்பளம் வாங்குகிறவர்கள் அரசு வூழியர்கள் - இவர்களுக்கு தனிச்சையாக விடுமுறை அளிப்பது சரியா?
ஏற்கனவே இருக்கும் ஏகப்பட்ட விடுமுறைகள் போதாதா? ஓணம் பண்டிகைக்கு தமிழக அரசு விடுமுறை! - தமிழர் திருநாள் கார்த்திகை தீபத்திற்கு கூட இல்லை! கேரளா அரசு என்ன தமிழர் பண்டிகைகளுக்கு விடுமுறை அளிக்கிறதா?
தனியார் நிறுவனங்களிலும் , சுய தொழில் செய்பவர்களையும் சிந்தித்து பாருங்கள் வியர்வையை ரத்தாமாக்கி ஒவ் ஒரு நாளும் உழைக்கிறார்கள். தங்கள் வருவாயில் ஒரு பகுதியை நாடு முன்னேற வரி என்ற பெயரில் அரசிற்கு தருகிறார்கள்.
தனியார் நிறுவனங்களின் வூழியர்கள் பெற்ற தாயை மருத்துவ மனைக்கு கூட்டி செல்ல ஒரு நாள் விடுப்பு கேட்டல் கூட எத்தனை பேரிடம் ஏசு வாங்க வேண்டி இருக்கிறது தெரியுமா? இதெல்லாம் ஒரு பிழைப்பா என்று சில சமயம் வாழ்வே வெறுத்து விடும்!
ஆனால் நமது வரி பணத்தில் வூதியம் வாங்கும் அரசு வூழியர்களோ வருடம் முழுவதும் விடுமுறை மழையில் திளைக்கிறார்கள். உண்மையிலேயே சேவைத்துறையில் இருக்கும் இவர்களுக்கு தன் குறைவான விடுமுறை வழங்க வேண்டும்! ஆனால் இவர்கள் நமக்கு எஜமானர் போல் நடத்த படுகிறார்கள் . இந்த கொடுமையை என்னவென்று சொல்வது?
வேலை நிறுத்தத்தை கண்டித்து உச்ச நீதி மன்றம் தீர்ப்பு அளித்தாலும் கூட- அரசு வூழியர்கள் தன்னார்வத்தின் மிகுதியால் பணிக்கு வரவில்லை என்ற சப்பை கட்டு வேறு
அரசாங்கம் செய்பவர்கள் இனியாவது இப்படி வீண் - வெட்டி விடுமுறை அளிப்பதை தவிர்க்க வேண்டும். அரசு வூழியர்கள் அலுவலகங்கில் செய்வதே கொஞ்ச நேர வேலை தான். அதையும் இப்படி விடுமுறை அளித்து வீணாக்க வேண்டம்!
அரசு எவ்வழியோ குடிகள் அவ்வழி! - இதை நினைவில் கொள்ள வேண்டும்! இப்படியே நிலைமை சென்றால் "உகாண்டா உள்ளூர் பஞ்சயது தலைவர் இறந்ததால் - ஒரு மாதம் அரசு விடுமுறை!" என்ற அறிவிப்பு கூட வரலாம்! ஆச்சர்ய படுவதற்கு இல்லை!

Tuesday, September 1, 2009

சிவக்குமார் என்னும் உன்னத மனிதர்...


கடந்த ஞாயிறு இரவு ஜி- தமிழ் தொலைகாட்சியில் பிரபல நடிகரும், ஓவியரும், இலக்கிய ஆர்வலுருமான திரு சிவக்குமார் அவர்களின் நேர்காணல் ஒளிபரப்பானது. ஏனைய சானல்களில் மொக்கை நிகழ்ச்சிகளின் தொல்லையால் சானல் தாவிக்கொண்டே வந்த என் கண்கள் இந்த நேர்காணலில் நிலைகுத்தி நின்றது.
நிகழ்ச்சி முடியும் வரை விளம்பர இடைவேளையில் கூட சானல் மாற்ற எனக்கு மனது வரவில்லை. ஏன்னென்றால் நேர்காணல் நடத்திய சுதாங்கன் கேட்ட கேள்விகளும் அதற்கு சிவக்குமார் அவர்கள் அளித்த பதில்களும் அப்படி.
ஏதோ நேர்காணல் நடத்துகிறேன் பேர்வழி என்று பிறர் செய்வது போல் ரிடயர் ஆன பெரிசுகளையும், கத்து குட்டிகளையும், கூட்டி வந்து ஆடம்பரமான செட்டில் உக்கார வைத்து நீங்க முதல்ல எப்போ சூச்சா போனீங்க ? எங்க பிகர்வெட்டி உதவாங்க நீங்க? என்பது போன்ற மில்லியன் டாலர் கேள்விகளை கேட்டு முதுகு சொரிந்து விடாமல், ஒரு பண்பட்ட மனிதரிடம் என்ன கேள்விகளை கேட்டல் என்ன பதில் வரும் அதனால் இந்த சமூகத்திற்கு எதாவது உபயோகம் உள்ளதா? என்று நேர்த்தியாகவும் , நறுக்கு தெரித்தார் போன்றும் கேள்விகள் வந்தன.
அதற்கு சிவக்குமார் அவர்கள் கூறிய பதில்கள் கனல் தெறித்து வந்தன. உண்மை எப்போதும் சுடும் என்பார்கள் அது உண்மைதான். அவர் கூறிய பதில்கள் அத்தனனயும் உண்மை. அதனால் தான் எந்த ஒரு எக்ஸ்ட்ரா சைடு பிட்ட்டிங்கும் இல்லாமல், பிரம்மாண்டம் இல்லாமல், "கூட சேர்ந்து கூழ்" குடிப்பதற்கு இரண்டு ஜால்ராக்கள் இல்லாமல், "என்னை பார் எனழகை பாரென்று ஆடை வுடுதிய, கேள்வி(?) கேட்கும் குப்பாயி" இல்லாமல் இந்த நிகழ்ச்சி மனதில் ஒரு மாற்றத்தையே உண்டாகியது எனலாம்.
மனிதர் தான் வாழ்க்கையில இனி ஒளித்து மறைப்பதற்கு எதுவும் இல்லை என்று திறந்த புத்தக மாக பேசினார். ஒரு மனிதன் சமூகத்தின் சந்தியில் நிர்வாணமாக நிற்பதற்கு கூட தயக்கம் கூடாது, வாழ்கை நெறிமுறைகளை வகுத்துக்கொண்டு அதன் படி பிறழாமல் வழ்ந்துவந்தால் இத்து நிச்சயம் சாத்தியம் என்று உணர வைத்தார்.
நீங்கள் சம்ம்பாதிக்க தெரியாதவரா? என்ற கேள்விக்கு, தான் நடித்த "அன்னக்கிளி" ஆட்டுக்கார அலமேலு" "பத்திரகாளி" போன்ற சில்வர் ஜூப்ளி படங்கள் தன்னால் மட்டுமே ஓடவில்லை அந்தந்த படங்களில் இருந்த தனிச் சிறப்புகள் தான் அதற்க்கு காரணம் என்று சொன்னார். "ஆட்டு கார அலமேலு படம் ஒரு ஆட்டிர்க்காகத்தான் ஓடியது" என்று சொன்ன போது மனது நெகிழ்ந்தே விட்டது. இன்று ஒரு படம் ஹிட்டானாலும் கர்வத்தின் உச்சியில் ஏறிக்கொண்டு டைரக்டரையே டைரக்ட் செய்யும், வூதியத்தை பலமடங்கு உயர்த்தி கொள்ளும் சில அரை வேக்காடுகளுக்கு சவுக்கடி கொடுப்பது போல் இருந்தது.
மேலும் பணம் சம்பாதிப்பது மட்டுமே வாழ்கை இல்லை என்றும், ஓரளவிற்கு மேல் நிறைவு கண்டு தன்னால் இயன்றதை சமூக பொறுப்புடன் செய்து வாழ்வதே வாழ்கை என்றும் கூறினார்.
அதன் படியே தான் இன்றைய சினிமா சூழ்நிலை தனக்கு உகந்தது அல்ல என்று தான் நல்ல நிலைமையில் இருக்கும் போதே நடிப்பில் இருந்து விலகி விட்டேன் என்று கூறினார்.
இதை கேட்ட பின், எழுபது வயது வரை பேத்திகளுடன், அந்நாளில் டூயட் "பாடிய", மற்றும் இந்நாளில் "பாடிக்கொண்டு இருக்கும்" "இளம்" ஹீரோக்களின் நினைவு நமக்கு வர தவற வில்லை.
வரும் காலங்களில் கம்பனை நன்கு பயின்று அதை அடுத்த தலை முறைக்கு ஏற்றார் போல் எளிதில் புரியும் படி வழங்கப்போகிறேன் என்று கூறினார். உண்மையிலேயே மிகவும் நல்ல முயற்சி. அதில் அவர் மிகச் சிறந்த வெற்றியும் பெற்று வருகிறார் என்பது நம் கண் கூடு..
தன் பிறந்த ஊரைபற்றியும், தான் வளர்ந்த விதம் , ஆட்டு சாணம் வாரியத்தில் இருந்து, தந்தை முகம் கானது வளர்ந்தது முதல் அனைத்தையும் குறிப்பிட்டார்.
ஒரு கட்டத்தில் தன் தாயை பற்றி குறிப்பிடும் போது வார்த்தைகள் வராமல் கண்கலங்கி விட்டார்.
தனக்கு மறுபிறவி நம்பிக்கை இல்லை எனினும் பிறந்தால் தமிழனாகத்தான் பிறப்பேன் என்று சொன்னபோது .. நம் கண்கள் குளமாக தவறவில்லை.
தான் வரைந்த ஓவியங்களை குறைசொல்ல எந்த ஒவியாராலும் முடியாது என்று சொன்ன போது அவருடைய தன்னம்பிக்கை மிளிர்ந்தது.
மிகுந்த சிரமங்களுக்கு இடையே அவர் போராடி இந்த இடத்தை அடைந்தாலும் பண்பட்ட அவருடைய பேச்சும்.. வெறும் பேச்சோடு நில்லாமல் அதை நடைமுறை வாழ்வில் அவர் கடை பிடிக்கும் விதமும், இன்றளவும் தன் தாயையும், தாய்மண்ணையும், தன் தொழிலையும் நேசிக்கும் இந்த அறுபத்தி ஏழு வயது இளைஞர் பிரமிக்க வைக்கிறார்.
நிக்ழ்சியின் ஆரம்பத்தில் ஒரு நடிகரின் பேட்டி என்ற உணர்வோடு பார்க்க ஆரம்பித்த நான், நிறைவையும் போது நம் வீட்டில் ஒருவர் அங்கே பேசிக்கொண்டு இருக்கிறார் என்று உணர்ந்தேன்.
ஒருவர் உண்மையை மட்டுமே பேசும் போது தான் நமக்கு அந்த உணர்வு வரும்! உண்மைதானே???

Friday, August 28, 2009

சீரியாளுங்கோ சிரிங்கோ !!!!!சீரியாளுங்கோ சிரிங்கோ !!!!!

மஹா ஜனங்களே !!! எனக்கு மண்டை முழுவதுமாக குழம்பி கூழ் ஆகி விடுவதற்குள் இந்த பதிவை எழுதி முடிக்க முயற்சிக்கிறேன்.. இறப்பதற்கு முன் தமிழ் சினிமாவில் ஹீரோவிடம் உண்மையை கூற முயற்சிக்கும் வில்லனின் அடியாள் போன்ற நிலைமை தான் என்னக்கும்.. வழக்கமா சீரியல் கில்லர்ன்னு சொல்லுவாங்கோ அதுக்கு அர்த்தம் இதானா?

நானும் உங்களை போன்றே இந்த உலகத்தில் உள்ள ஒரு சாதரண சாமானியன் தான். நன்றாக இருந்த நான் நான் எந்த நிலைக்கு ஆளானேன் என்று எண்ணிப் பார்கிறேன். எல்லாம் இந்த பாழாய் போனே சீரியல்லால் தான். அதுவும் நான் சீரியலாக சீரியல் பார்க்கும் சீரியல் பைத்தியம் இல்லை. பார்த்தீர்களா? நான் உங்களையும் குழப்ப ஆரம்பித்து விட்டேன்? சீரியல் என்பது விசு படம் மாதிரி பார்பவர்களையும் குழப்பும், படம் ஓடும் தேட்டர் பக்கம் போகிறவர்களையும் சேர்த்து குழப்பும்..

நான் பார்த்தது ஒரே ஒரு சீரியல் தான்.. அதுக்கே இந்த நிலைமை. அந்த மெகா சீரியலின் மகா கொடுமையான பெயர்.. அலங்கோலங்கள்.. தேவையா நீ என்று நமக்கு நாமே கேட்டு கொள்ளும் அளவிற்கு நம்மை ஆக்கிவிடும் நெடுந் தொடர்..

சீரியல் எல்லாம் பெண்களுக்கு தானே? உனக்கேன் இந்த வேண்டாத வேலை என்று தானே கேட்கிறீர்கள்.. வேறு வழி? வேற நிகழ்சியை பாக்க வுட்டாதானே?

இனி நான் சொல்வதை கேளுங்கள்..நீங்களும் குழம்புங்கள்...

குழப்பம் எண் ; ஒன்று


செல்வி திருமதி (எப்படிவேணா போட்டுகுங்க இப்ப எல்லாம் ஒன்னுதானம் !!!) :அபி
இந்த அம்மா அபி கண்சுற்றக்டின் ன்னு ஒரு கம்பெனி வச்சு கீறாங்கோ .. அதுல பில்டிங்க்ஸ் தவிர எல்லாம் கட்ராங்கோ. அந்த வெத்து வெட்டு கம்பனிக்கு ஒரு ஆபீசு.. அங்க ஆணி புடுங்குறதுக்கு ஒரு நாலு பேரு..
இதுல இன்னா பியுட்டி நா இந்த அம்மாவ தொல்(லை) காப்பின்னு ஒருத்தரு டாவு கட்னாரு.. (இவரு டோட்டலா எத்தினி பேர டாவு கட்ட்னாருனு தனி லிஸ்ட் கீழ கீது) திடீல்னு இந்த அம்மா பாச்கருன்னு ஒரு டுபகூர கட்டிகிசி. இதுல நம்ம தொல்ஸ் அப்செட்டு.. அப்பாலிகா நம்ம பாஸ்கருக்கும் அபிக்கும் லடாய் வந்து கைடிகினாங்கோ. இதுக்கு அப்புறமும் நம்ம அபி அம்மா கொஞ்ச நாள் (இல்ல இல்ல சீரியல்ல எல்லாமே வருஷம் தான்) கொஞ்ச வருஷம் கஷிச்சி நம்ம அபிய திரும்பவும் பாச்கருக்கே கலியாணம் செய்ய டிரை பண்ணிச்சி.. அதுக்கு நம்ம அபியும் ஓகே சொல்லிச்சி பா.. அனா கல்யாணம் வயக்கம் போல நடக்காமலே ஊதிகிசி.. அப்புறம் இந்த அபி அம்மா சும்மா (ரைமிங்.) இல்லமே ஒரு இத்து போன மெண்டல் டாக்டருக்கு கல்யாணம் பண்ண டிரை பண்ணிச்சி அதுவும் ரெண்டு தடவ.
அதுக்கும் நமது புரட்சி நாயகி (நான் உசாரு) அபி அம்மா ஓகே சொல்ட்டங்கோ.. அனா இந்த யாபோன பாஸ்கர் இஸ்டாப் பண்டான். இப்போ இந்த வாரம் நம்ம அபி அப்பா, திருப்பியும் நம்ம அக்கா அபிய, அந்த பாஸ்கரையே கட்டிக்க டார்ச்சர் பண்றான். இவன்னா அபிக்கு அப்பனா இல்ல ??? எனக்கே தெரியல.. நம்ம புரட்சி நாயகி அபி இன்னும் எத்த்நிவாடி கல்யாணத்துக்கு ரெடி ஆவான்களோ?

குயப்பம் நம்பர் தூ (சி..) டூ : தொல் ( லை) காப்பியன்..


இவருதம்பா டைருடக்கறு அதனால இவரு மட்டும் பெசல். இவரு பாக்கற பொண்ணு கள எல்லாம் லவ் பண்ணுவாரு.. கலயாணம் பண்ணிக்கணும்னு ஆசபடுவரு.. அப்படியே லவ் சீன் லாலாலா போட்டு ஒரு ரெண்டு மாசம் ஓட்டுவாரு.. கடசில யார்ருகவது விட்டுகுடுதுட்டு தியாகி ஆயிடுவாரு.. இவரு லிஸ்ட்ல ஊர்லந்து தள்ளிகினு (ரெண்டு பசங்களோட) ஒரு அழுமூஞ்சி பொண்ணு.. அபி.. அபி தங்கச்சி ஆனந்தி.. இன்னொரு தங்கச்சி ஆர்த்தி.. அப்புறம் சந்திரான்னு ஒரு பொண்ணு (அது இப்ப காணவில்லை), அப்புறம் அபியோட பிரண்டு ...நல்ல வேலை இவரு அபியோட அம்மாவ மட்டும் தான் உட்டுவைகல..

(உட்டா இவருக்கு அப்பா கேரக்டர் போட்டு பிளாஷ் பேக்கல அவங்களையும் ஒரு வருஷம் ஓட்டுவாரு)

குயப்பம் நம்பர் மூணு : ஆனந்தி..

இந்தம்மா ஒரு நவீன பின்னிய (சீ) பெண்ணியவியாதி.. அதனால்தான் கட்டிய மனைவிய டார்ச்சர் செய்தே கொன்று லூசும் ஆன ஒரு முன்னால் காதலனை கல்யாணம் பண்ணிகிராங்கோ. அதுக்கு முன்னாடி அந்த லூசுகாதலனுக்கு வீட்ல வச்சி மெயின்ட்டேயன் பண்ண இன்னொரு ரிபோர்டர லவ் பண்ணாங்கோ.. நடுவுல தொல்லை கபியன் வேற... கர்மம் கர்மம்.. இப்ப என்னடானா அந்த லூசு புருஷன் கூட திருப்பியும் முட்டிகிசி.. ரிபோர்டர் கூட பேசரங்கோ.. (என்ன கொடுமை சார் இது...!!)

குயப்பம் நம்பர் நாலு :- ஆதி..

இந்த ஆளு எப்பபதாலும் ஹை டோன்ல கத்திகினே இருப்பான்.. வன் ஏற்கனவே அபியோட பிரண்ட எல்லாம் முடிச்சதுக்கு அப்புறம் தான் கல்யாணமே பண்ணிக்குவான் ..(என்ன அந்தம்மா முற்போக்கு வியாதி.. அப்படித்தானே இருபாங்கோ..) அப்புறம் இன்னாடானா இரு பொலிடிகல் ஆளோட பொண்ணு இவன ஒன் சைடா லவ்ஸ் பண்ணும்.. அப்புறம் இவன் தம்பியையே கட்டிக்கும். எதுக்கு? பழி வாங்கறதுக்கு? யாரை? ஆதியையா? இல்ல இந்த கர்மத்த பாக்கற நம்மையா? இப்ப இன்னாடான்னா இந்த ஆதி தன் தன் தம்பியையே போட்டு தள்ளிடான். அதுக்கு கொஞ்சம் கூட கவலைபடாம அந்த ஆதிய ப்ராகட் போட்டு சுத்துது..

இதுக்கு நடுவுல ஆதியோட வைபு தொல்லை கூட சேந்து கவர்ச்சியா டிரஸ் பண்ணிட்டு சுத்துது.. இத பாக்குற எனக்கு மண்டையே சுத்துது.. இதெல்லாம் போதாதுன்னு அந்த ஆதிபய என் ஆர் ஐ (?) பிகர் மேனகாவை மடிக்க டிரை பண்ணறான்.. (..அவ்வவ்..முடியல..)

குயப்பம் அஞ்சு : பாஸ்கர்..

இந்த ஆள் பந்த பண்றதா பாத்தாலே எரும ஏர் ஓட்டரமாதிரி இருக்கும் .. இத வேற இவரு ஸ்டைல்ன்னு காமிச்சி நம்ம காண்டாக்குவரு . இந்த ஆள் அபிய கைடிவுட்டு அப்புறம் ஒரு பணக்கார பிகர மடிச்சி கலயணம் பண்ணிக்க போசொல்ல கல்யாணத்தன்னைக்கு அதை யாரோ மர்டர் பண்ணிடுவங்கோ.. திருப்பியும் கொஞ்ச வருஷம் கழிச்சு இன்னொரு குவாரி ஓனர் பொண்ண ஒணர போட்டு தள்ளிட்டு கலயணம் பண்ணிப்பாரு . அப்புறம் ஒரு குழந்தைய பெத்துட்டு இந்த பொண்ணையும் போட்டு தள்ளிடுவாரு.. இப்ப திருப்பி அபிக்கு பிரக்ட் போடறாரு..இதை விட கொடுமை இவனுக்கு இந்த பிகரை எல்லாம் அரேன்ஜ் பண்ணி குடுபதே இவங்கம்மா தான்..( அம்மாவை இதை விட யாராலும் அசிங்க படுத்த முடியாது..)

இதெல்லாம் மெயின் குயப்பங்கள் .. அதுவும் நான் அவ்வபோது மட்டுமே பார்கிறேன்.. இப்படி பர்ர்த்த எனக்கே இப்படி என்றால் .. ஒரு எபிசொட் கூட தவறாமல் பார்த்து இதையே தி ஆர் பி வரிசையில் நம்பர் ஒன் சீரியலாக வைத்திருந்தார்கள் தாய் குலங்கள்?

அவர்களின் மனநிலை என்ன? இதைதான் விரும்புகிறார்களா??

இந்த மாதிரி கண்றாவிகளை தொடர்ந்து பார்த்தல் வூடு விளங்குமா?? ஊர் வுருபடுமா??

இந்த கொடுமைகளை வேறு புதுமை பெண்களின் அடயாளம் என்று சித்தரிக்கின்ரார்களே .. எங்க போய் முட்டிகிறது? சில அரைவேக்காடுகள் இதையெல்லாம் பாத்துட்டு இதையே பாலோ பண்ண ஆரம்பிக்குதுங்க.. இவர்களை என்ன செய்வது..

நான் ஒன்னே ஒன்னு கேட்டுகிரங்க.. அம்மா பாப் கட்டிங் பண்ணி அரை கை ஜக்கெடோட அலையும் முற்போக்கு நங்கைகளே.. உண்மையிலே பெண்களை முன்னேற்ற வேண்டும் என்றால் பெண்களுக்கு தெரியாமல் பெண்களேயே ஏமாற்றி அவர்களை மிகவும் கொடுமை காரிகளாகவும்.. அல்லது ரொம்ப அப்பாவியாகவும் .. இல்லை அடுத்தவள் புருசனுக்கு ப்ராகட் போடும் புதுமை பெண்ணாகவும்.. இன்னும் கேடு கெட்ட வழிகளில் கேவல படுத்தும் இந்த மாதிரி சீரியல்களையும்.. சீரியல் டைரக்டர் களையும்..எதிர்த்து போராடுங்கள்..

(கொடுமை என்ன வென்றால் பல முன்னணி சீரியல்களின் "கிரியடிவ் ஹெடே " பெண்கள் தான்..

ஏதோ என்னால முடிஞ்சது.. படிச்சிட்டு கருத்து சொல்லுங்க...

டிஸ்கி : விளக்க படத்தை நன்கு கவனிக்க.. அதில் உள்ள அலங்கோலத்தில் எதனை பேருக்கு எதனை பேருடன் தொடர்பு வுள்ளது என்று கண்டுபிடித்தால்?? வேற என்ன ? பைத்தியம் தான் பிடிக்கும்!!