Thursday, August 20, 2009

புவியில் ஒரு சொர்க்கம் - வால்பாறை 3

எனது இரண்டாவது பதிவிற்கு வாக்களித்து, பிரபல பதிவுகளின் பட்டியலில் சேர்த்தமைக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளை வாக்களிதோற்கு தெரிவித்து கொள்கிறேன் ! எனது பதிவுகளின் மூலம் யாரவது ஒருவர் ஒரு சிறு பயன் அடைந்தாலும் அது என் பாக்கியம்.
இனி ஓவர் டு வால்பாறை ! வாங்க கபுல்ச மீட் பண்ணுவோம் !! அப்படியே மனசுக்குள்ள என் முந்தைய பதிவுகளில் உள்ள வால்பாறை படங்களை ஓடவிடவும் ! புடிச்ச மியுசிகயும் பேக் கிரவுண்டு போட்டுகவும் !!
இப்ப நீங்க நிக்கற இடம் மேல் நீரார் டேம்!! போன எபிசொட்ல நான் டன்னல் பத்தி சொல்லி இருந்தேன் ! அந்த டன்னல் பத்தி தெரிஞ்சிகினும்னா நீரார் டேம் பதியும் தெரிஞ்சிகினும்!
நிறார் டேம் வல்பாரைஇளர்ந்து சுமார் பதினஞ்சு கிலோ மீட்டர் தூரம் இருக்கும் . இந்த தேமா சுத்தியயும் அடர்ந்த மழை காடுகள் தான். நீங்க இங்க வரும் பொது நிறைய அழகான டி எஸ்டேட் களையும் பாக்கலாம் சின்கொனன்ர இடத்துல இருக்கும் மலேரியா நோய் தடுப்பு மருந்து தயாரிக்கும் கம்பனியையும் பாக்கலாம்.
சரி நாம போனவாரம் குளிச்ச சின்ன கல்லார் ஆற்று நீர் எல்லாம் இந்த டேமுக்கு தான் வருது.. அதை தவிர சில காட்டாற்று நீர் எல்லாம் கூட இங்க வருதுங்க.. இந்த டம் மதகுகள் மேல நின்னு தண்ணி தேங்கி நிக்கிற அழக பாக்கனுமே.. மலைகளுக்கு நடுவே வளைஞ்சு வளைஞ்சு .. நீங்க சத்யமா இறைவன் எவ்ளோ பெரிய ஓவியன்னு நினச்சு நினச்சு சிலகிப்பீங்க..
இதோட உயரமான மதகுகள் வழியே தண்ணி திறந்து விடறப்போ அது வழிந்தோடும் அழகுக்கு.. ஒரு நூறு கவிதையாவது எழுதலாம் போங்க..
சரி இந்த தண்ணி திறந்து விட்டா எங்க போகும் ? அது நேரா கேரளாக்கு தான் போகும் .. ஆமாங்க வால்பாறை தான் மேற்கு தொடர்ச்சி மலைகளின் அந்த பகுதிக்கு எல்லைங்க.. அதனால் இங்க இருக்கற அனைகள்ள இருந்து திறந்து விடற தண்ணீர் பெரும்பாலும் கேரளாக்கு தான் போகுது.. ஆனா அப்பா இருந்த காமராஜர் உசாருங்க.. பரம்பி குளம் அழியார் பாசன திட்டம்னு ஒன்ன போட்டு இந்த தண்ணிய தமிழ் நாட்டுக்கு திருப்பி விட்டு பாசனமும் பண்ணாரு கரண்டும் எடுத்தாரு..
ஆனா இப்போ இது மாதிரி எதாவது ஒன்ன புதுசா போடசொல்லுங்க பாப்போம்!!
சரி நானு டனள் டனல்னு சொல்றேன்ல அது மூலமாகத்தான் தண்ணி தமிழ் நாட்டுக்குள்ளே திருப்பி விடப்படுது.. அது சோலையார் டேம் வந்து பின்ன கீழ இறங்கி அழியார் தேமும்கு வருது..
இந்த தனளோட மொத்த நீளம் எட்டு கிலோ மீட்டர்.. (ஸ்ஸ்ஸ் ... அப்பா இப்பவே கண்ணா கட்டுதா ???)..அகலம் சுமார் ஏழு மீட்டர்.. உயரமும் ஏழு மீட்டர்.. இந்த தனளோட வழிய அட்திக பட்சமா 59.5 கிசெக் தண்ணி வெளியேற்றலாம்..
அது மட்டும் இல்ல இந்த டன்னல் ஆரம்பிக்கிற இடத்தில இருந்து முடியிற வரைக்கும் ஒரே நேர் கோடு தான்.. கொஞ்சம் கூட வளைவு நெளிவு கிடையாது.. இந்தபக்கம் நுழயிர எதுவும் அந்த பக்கம் தான் வெளியே வர முடியும் ..ஏன் தெரியுமா ? அப்படி இருந்தா தண்ணி ஓடற விசைல வலைவுகள்ள மோதி பெரும் இன்னல் டன்னலுக்கு ஏற்படும்..
சரி இத கட்டி முடிக்க எவ்ளோ நாள் ஆயிருக்கும்? என்னது கட்டி முடிக்க வா? ஹி ஹி .. இதுமொதமும் மலைய குடைஞ்சு குடைஞ்சு வுருவக்குனது ... கீழ மட்டும் கன்க்ரிட் ரோடு.. பெரிய பராமரிப்பு வண்டிகள் கூட இதுக்குள்ள போலாம்...
இத குடையும் பொது வெளி ஏத்தின பாறைகள். மண்குவியல் மட்டும் 360,000 CUM.. பல ஆயிரகனக்கனவங்க பல வருடங்கள் கஷ்டப்பட்டு உருவாக்குனது இது..
ஏன் குடயனும் .. திறந்த வெளி கால்வாய் போதாதான்னு நாம கேக்கலாம்..ஆனா .. அதுல எதனை காட்டு விலங்குகள் விழும்? அப்புறம் நல்ல மழை காலங்கள்ல பாறைகளும் மண்ணும் சரிந்து இத மூடிடும்.. அதனால தான் எந்த ஏற்பாடு.. சூபர்ல?
இது தான்ங்க இந்த டன்னளோட ரகசியம்.... அடுத்து?? சோலையார் டேம்? நல்ல முடி வயு பாயிண்ட்? வகைமாலை எஸ்டேட்? ஈது குழி செட்டில் மென்ட்? கிராஸ் ஹில்ல்ஸ்?
படிச்சிட்டு வோட்டு போடுங்க!! பாப்போம் ...

Sunday, August 16, 2009

புவியில் ஒரு சொர்க்கம் - வால்பாறை-2

என்னுடைய முதல் பதிவ போட்டுட்டு யாராவது நம்மள தொடர்ந்து எழுதச் சொல்றாங்கலானு பாத்து கிட்டே இருந்தேன். ஒரே ஒரு நல்ல உள்ளம் என்ன தொடர்ந்து எழுதசொல்லி கேட்டு இருக்கிறார். அந்த ஒரு நல்ல உள்ளதிர்க்காகவே இந்த இரண்டாவது பதிவை எழுதுகிறேன். நண்பர்கள் என்பதிவை படிப்பது மட்டும் அல்லாமல் இதில் உள்ள நிறை குறைகளை விமர்சித்தீர்கள் என்றால் மிகவும் மகிழ்ச்சி.

வால்பாறை ஒவ்வொரு முறை உச்சரிக்கும் போதும் அடுத்து நாம் எப்போ அங்க போகப்போறோம்னு ஏங்க வைக்கும் ஒரு இடம்.

நான் ஒவ்வொரு முறை அங்க போகும் போதும் எனக்கு புதிது புதிதாய் எதாவது ஒரு இடம் பார்க்க முடிகிறது. இன்னும் எத்தனை முறை சென்றாலும் கூட எதோ ஒரு அற்புதம் எனக்காக அங்கே காத்து கொண்டு தான் இருக்கிறது.


இதற்கு முக்கிய காரணம் என்னோட நண்பர் சாலமன் தான். இவர் அந்த மண்ணின் மைந்தர். நான் அப்புறம் இவரபத்தி விரிவா சொல்றேன். அங்கபோரவாங்களுக்கும் உபயோகமா இருக்கும்.


சரி ஓவர் டு வால்பாறை. நான் முன்னாடியே சொன்ன மாதிரி அங்க நீங்க நிக்கிற ஒரு ஒரு இடமும் பிக்னிக் ஸ்பாட் தான்.

அதுல நான் ரசிச்ச சில இடங்கள பத்தி சொல்றேன்.

முதல்ல சின்னகள்ளார் அப்படின்ற இடம். இந்த இடத்தோட சிறப்பு என தெரியுமா? சொன்ன நம்ப மடீங்க இந்தியாவிலயே சிர்புஞ்சிக்கு அடுத்த படியா இங்க தன் அதிக மழை பெய்யுது.

இந்த இடத்துக்கு போனாலே சுற்றிலும் அடர்ந்த காடுகள், மலைகள், சூல்கொண்ட மேகங்கள்னு ரொம்ப ரம்யமா இருக்கும்.

இங்க ஒரு பால்ஸ் இருக்கு அட சின்னகல்லார் பால்ஸ் அப்படின்னு சொல்வாங்க. பால்ச்ன நீங்க குற்றாலம் மாதிரி நினைக்க வேண்டாம். இது வேகமா வர காட்டருவி. நாம கொஞ்சம் ஓரமா பறைகள்ள நின்னு தான் குளிக்க முடியும். ஆனா சும்மா சொல்லக்கூடாது உற்பத்தி ஆகி சில மைல்கள் மட்டுமே கடந்து வந்து இருக்கிற அந்த புத்தம் புது தண்ணீர்ல குளிக்கிற சுகம் இருக்கே அத வார்த்தைகள்ல எவ்வளவு சொன்னாலும் ஈடாகாது.


தண்ணி சும்மா கண்ணாடி மாதிரில இருக்கும். அதுல இறங்க்ரதுக்கே ஒரு தில் வேணும்ல. பின்ன சும்மா ஐஸ் கட்டிகுள்ள நம்மள தூக்கி போட்டா மாதிரி இருக்கும்.

தண்ணி ஓடி வர அந்த வேகத்துக்கு நம்ள சூபரா ஒரு மசாஜ் பண்ணும். ஆகா அதுதான்யா சுகம். இந்த பால்ஸ் போறதுக்கே கொஞ்சம் தில் வேணும் தான். ஏன்னா ரோட்டில் இருந்து ஒரு கிலோமீட்டர் பாரஸ்ட் குள்ள நடந்து தான் இந்த பால்ஸ் போகணும். அதுவும் நடுவுல ஒரு தொங்கு பாலம் வேறே வரும் அய்யோ! வடிவேலு பாணில சொல்லணும்நா பி கேர் புள் !!!! நடந்து போற கட்டைகள் இங்க ஒன்னு அங்க ஒன்னு தான் இருக்கும். தவறி ஸ்லிப் ஆனோம் கபால மோட்சம் தான்.

அது மட்டும் இல்லங்க தயவு செஞ்சு இங்க போய் தண்ணி அடிக்காதீங்க!! அப்புறம் உசுருக்கு கேரண்டி கிடயாது! ஆமா.

அதுசரி எங்க அழகு இருக்கோ அங்க ஆபத்தும் சேர்ந்தே இருக்கும். இத நீங்க எங்க நியாபகம் வச்சு கிரீன்களோ இல்லையோ வால்பாரைல கண்டிப்பா நியாபகம் வச்சுக்குங்க சொல்லி புட்டேன். அப்புறம் நீங்க என்ன திட்ட கூடாது.

ஆமா இந்த அருவி எங்க உற்பத்தி ஆகி எங்க போகுதுன்னு கேட்டேன். அடுக்கு பதில் சொன்னவங்க கிராஸ் (புல்) ஹில்ஸ் அப்படின் இடத்தில் இருந்து உற்பத்தி ஆகி நீரார் டாம் போயி அப்படியே பெரிய டன்னல் வழியா சோலையார் டாம் போயி அப்புறம் ஆழியாறு டாம் போகுதுன்னு சொன்னாங்க.

அது என்ன டன்னல்? அது எதுக்கு? அதனால என்ன பயன்? அது எப்படி இருக்கும்? அத யார் கட்டுனாங்க? இதுமட்டும் இல்ல இந்த டன்னள்ள நீங்க நினச்சி கூட பாக்க முடயாத பல விஷயங்கள் இருக்கு!

என்னன்னு கேக்றீங்களா? ஐ அஸ்கு புஸ்கு ! படிச்சிட்டு வோட்டு / கமெண்ட்ஸ் போடுங்க அப்பா சொல்றேன்!