Sunday, October 18, 2009

நாராயணா இந்த கொசுத்தொல்லை தாங்கமுடியாலடா!

நாராயணா இந்த கொசுத்தொல்லை தாங்கமுடியாலடா! டேய் சுனாமி மண்டையா! இந்த தீபவாளி பொங்கல் புது வருசம்னு வந்தா போதும் எங்கர்ந்து தான் வர்ரானுகநேனு தெரியல, ஒரு சிகப்பு கலர் ரிசெப்சின் சேரு, ஆறு பிளாஸ்டிக் சேரு வாடகைக்கு வங்கிக்க்னு வந்து எதாவது சத்ரத்துல போடுகினு நான்தான் நடுவரு, நான்தான் நாட்டாமைன்னு டைட்டில் போட்டுகினு உக்காந்து கிரான்னுகோ!

இத வேடிக்க பாக்க வேற ஊர்ல வேல வெட்டி இல்லாம ஒரு நூறு பேரு,இல்ல இல்ல சில இடத்துல ஆயிரம் பேரு கூட சத்திரம் லெவெலுக்கு ஏத்தா மாதிரி குடும்பத்தோட வந்து குந்திகிரனுங்கோ! வெளங்காத வெண்ணைங்க! மைக்க புடிச்சி எவென் எத சொன்னாலும் சரி இருமினா கூட சரி இன்னவோ இவனுங்க மட்டும் பயங்கரமா புரிஞ்சிகின புத்தி சாலி மாதிரி விழுந்து விழுந்து சிரிப்பனுங்கோ! அப்ப தானே டிவியில நல்லா குலொஸப்ல காட்டுவானுங்கோ!

நாளும் கிழமையும் அதுவுமா இந்த கரடி,காண்டாமிருக மூஞ்சியெல்லாம் பாத்து நம்மளும் காலங்காத்தால காண்டாவலாம்!

பண்டிகை அதுவுமா எதாவது ஒரு டிவி பாக்க முடியுதா இவனுங்கலாலே ? எந்த சானலும் பாக்க முடியல .. பட்டிமண்டபம்னு டைட்டில் போட்டு டிவிக்கு டிவி சாவடிகிரானுங்கோ!

அதுவும் இவனுங்க தலைப்பு "தண்ணி புடிக்க சிறந்தது அண்டாவா? குன்டாவா?" குடும்பத்துல குழப்பம் பண்றது மாமியாரா? மருமகளா? கற்பில் சிறந்தவள் ஷக்கீலாவா? ப்ரதீபாவா? மனைவியிடம் அடிக்க சிறந்தது சோப்பா? சொம்பா? இப்படி எல்லாம் தலைப்ப வச்சி நல்லா இருக்க குடும்பத்துல கூட நல்ல நாளும் அதுவுமா சண்ட மூட்டி வுற்றுவானுங்கோ!!

இப்படி நாட்டுக்கு தேவையான நல்லா பிரச்சினைகளை அலசி ஆராய்ந்து, பிச்சி பீராஞ்சி, கடைசில நடுவர்னு ஒக்காந்து இருக்குற ஒரு தேங்கா மண்டையன் ஒரு தீர்ப்ப சொல்லுவான்!

அதை அப்படியே இந்தியன் பீனல் கோட் செக்சன் 88cla அமேண்ட்மெண்டு போட்டு சட்டமாக்க வேண்டியதுதான்! போக்கத்த பெர்சுங்க , இதுங்க சொல்ற தீர்ப்ப இதுங்க வீட்லையே மதிக்காதுங்க! இதுல ஊர்ருக்கு உபதேசம் வேற!

மனசுல பெரிய சுப்ரிம் கோர்ட் ஜட்ஜ் நு நினைப்பு!

இதுங்களுக்கு தகுதியே ஒரு பத்து பட்டிமன்றத்துல வாதாடி கிழிசிருக்கணும் அவ்ளோதான்.
எப்படி கீழ் கோர்ட்ல வாதாடி வாதாடி வாத திறமையால மேல் கோர்ட்டுக்கு ஜட்ஜ் ஆவங்களோ அப்படிதான்! அப்பப்ப வாங்க! வாங்க! ஆஹா! ஓஹோ ! பிரமாதம் ! பின்னிடாருயா! அவுக நம்மாளுக! இந்தமாதிரி வார்த்தைகளை சொல்லி ஹி ஹி நு லூசுமாதிரி சிரிக்கணும்!

அப்புறம் தீர்ப்பு சொலும் போது முதல்ல லைட்டா காமெடியா ஆரம்பிச்சு ஒரு க்ரூப்ப சப்போர்ட் பண்றமாதிரி பண்ணி அப்புறம் தடால்னு சீரிஎஸ் ஆகி அந்த குரூப் தன் கிரிமினல் கேங்க்னு, டிக்ளர் பண்ணி தடால்னு இன்னொரு க்ரூப்கு சாதகமா தீர்ப்ப சொல்லிடனும்! அவளோதான் நீங்க தான் நடுவர்! (கவலை படாதீங்க எவனும் நாட்டாமை தீர்ப்ப மாத்துன்னு கத்த மாட்டான்! ஏன்னா எவனும் கடைசீ வரைக்கும் பாத்தா தானே? ).

இவங்க இப்படினா வாதாடிகள் தகுதி இதுதான்!

நடுவர் அவர்களே நு ஆரம்பிச்சு எதாவது ஒரு பிட்ட போடம்னும் ! அப்புறம் வூட்ல எம்புள்ள என்னையே எடகுடமா கேள்விகேட்டு களாய் கிறான்! எம்பொண்டாட்டி ரொம்ப புத்திசாலி! நாந்தான் அவளுக்கு பொடவ துவச்சி போடுவேன்னு வீட்ல நடக்ரத எல்லாம் வெக்கமில்லாம மேடைல சொல்லி கைதட்டல் வாங்கணும்! அப்புறம் எதாவது ஜோக் புக்,வார இதழ் இதுல்ல எல்லாம் வர ஜோக்ஸ ஒன்னு விடாம மனப்பாடம் பண்ணி சொந்தமா தயாரிச்ச மாதிரி அப்பப்ப டைம் பாத்து அவுத்து விடனும்! எதாவது பாட்ட கழுதை குரலில் பட தெரிஞ்சா ரொம்ப நல்லது!

முக்கியமான ஒன்னு நீங்க மொக்க பேரசிரியராவோ இல்ல பேங்க் ஊழியரவோ இருக்கனும் அப்பதான் நீங்க பட்டிமன்ற மைக் பிடிக்கவே தகுதி பெற்றவர்!

அப்புறம் பார்வையாளர்க்கு நு ஒரு தகுதி இருக்கு! வேல வெட்டி எதுவும் இருக்க கூடாது! எப்படா எவனாவது நம்மள கூப்டுவான் குடும்பத்தோட போய் உக்காந்து வேடிக்கை பாக்கலாம்னு அலையனும்! நல்லா முப்பத்தி ரெண்டு பல்லையும் காட்டி கேக்க பெக்கன்னு சிரிக்கணும்!.

டேய் தயவு செஞ்சி சொல்றேன் இந்த பட்டி மன்ற தொல்லைய ஸ்டாப் பண்ணுக டா ! இன்னும் எத்தனை வருசத்துக்கு இதையே அறைபீங்க? வரவர அம்மாவாசை பௌர்ணமி வந்தாகூட எங்கடா பட்டி மன்றம் போட்டுடு வாங்கலோன்னு பயமா இருக்குடா!

டேய் நாராயணா இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலடா எதாவது மருந்தடிச்சி கொல்லுங்கடா!