Wednesday, October 7, 2009

தமிழகத்தின் அவசியமான பிரச்சினை !


தமிழகத்தின் அதி அவசியமான பிரச்சனை !இந்த கீர்தனாரம்ப காலத்திலே இந்த லோகத்திலே ஒரு மிக அத்யாவசியமான ஒரு பிரச்சனை ஒரு குழப்பம் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது! இதனால் தமழ் நாட்டில் உள்ள பெண்டுகள் பிள்ளைகள் புருஷர்கள் எல்லோரும் மிகவும் விசனம் கொண்டு மிகவும் கலகத்திலே பீதி அடைந்து உள்ளார்கள்.பிள்ளை கள் படிப்பதை (பாட புத்தகங்களை) நிறுத்தி விட்டார்கள், புருஷர்கள் ஸ்த்ரீகளை நோக்குவதையும் அவர்களிடம் அபிலாசை கொண்டு லோ லோ என்று அலைவதையும் நிறுத்தி விட்டார்கள்! ஸ்த்ரீகள் மிகவும் ப்ப்ரையதனம் கொண்டு சதா சர்வகாலமும் கண்ணீரும் கம்பலையுமாக தங்கள் நோக்கும் மகா தொடர்களை கூட காண்பதை கூட மறந்தே விட்டார்கள்!ஜனங்கள் நேருக்கு நேர் தெருவிலே கண்டால் கூட தங்கள் சேம லாபங்களை விசாரிப்பதை கூட லக்ஷியம் செய்யாமல் அவாளுக்கா இந்த அவலநிலைமை லோகத்திலே இப்படியும் கூட நடக்குமா ? பகவானே என்ன கொடுமை இது ?கலியுகத்திலே தலை வலிக்குதே என்று பரஸ்பரம் விசனம் கொண்டு விசாரிகின்றனர்.அவ்வளவு என்? தமிழ் நாட்டு ராஜா ஸ்ரீ ல ஸ்ரீ தமிழ் காத்த நல்லோன் (தமிழ் ஜனங்களை அல்ல) தர்பாரில் கூட ஆடல் (?) வல்ல அணங்குகள் எல்லாம் முறை இட்டு கண்ணீர் சிந்தி குய்யோ முறையோ என்று ஓலமிட்டு அழுது புலம்பி தங்களை காக்க பிரார்த்தித்து கொண்டனர்!தமிழ் நாட்டிலே வெளியாகும் சஞ்சிகைகள் எல்லாம் அண்டை மாநிலங்களில் வெள்ளம் ஓடினாலும் சரி ஊரே அழிந்தாலும் சரி அதையெல்லாம் ஒரு சிறு பொருட்டேனும் மதியாமல் அலக்ஷியம் செய்து வரி விளம்பரம் வரும் பக்கத்திலே பெட்டி செய்தியாக தான் போடுகிறார்கள்.

தலைப்பு செய்தியே நம் காலக்ஷேப தலைப்பு தான்!அது என்ன பிரக்ஷினை ? என் இத்தனை ஆர்வம் ? நரகசுரன் பூமியலே மீண்டும் அவதரித்து விட்டானா ? தேவர்கள் மீண்டும் பாற்கடலை கடைய மத்து தேடி திருமாலை வேண்டி புறப்பட்டர்களா? இல்லை கத்தரிக்காய் ஒரு வெள்ளிக்கு ஒரு வீசம் வழங்க தமிழ் கத்த நல்லோன் ஆணை இட்டு விட்டாரா?அல்லது தனக்கு பிறகு இளைய இளவரசன் தற்போதைய சேனை தலைவன் குறிஞ்சி குசும்பனும் , மூத்தவன் வணங்க முடியும் நாட்டை ஆளாமல் முடியாட்சி மறைந்து குடி (?) ஆட்சி மலர அருள் புரிந்து விட்டாரா?இப்படியாக எல்லாம் சத்தியமாய் இருக்காது என்று பக்த கோடிகளுக்கு நன்றாகவே இந்நேரம் பரிக்ஷயம் ஆகியிருக்கும்.

விஷயம் என்னவென்றால் இதுகாரும் பொது ஜனங்களுக்கு கலை சேவை புரிந்து காலாவதியான "புவனேஷ்வரி அம்மை" தன் மீது பிரியம் கொண்ட கலா ரசிக மனிகளுக்காக இஷ்ட ப்ராப்தி "பொது சேவை" செய்து இன்று காவல் துறை யினராலே தடுத்தாட்கொள்ளப் பட்டுள்ளார் ..

இது விஷயமாகவே அவனியிலே இத்துணை நிகழ்வுகளும் நடந்தேறி வருகின்றன.

இதை விட லோகத்திலே வேறு அத்யாவசியமான வேறு பிரச்சினைகள் இல்லாததால் இதையே மக்களனைவரும் த்யானித்து மோக்ஷ பிரார்த்தனை செய்கிறார்கள் .

நானும் அம்மையாரின் புகழ் பாடி இக பர சுகம் வேண்டி இந்த காலக்ஷேப நிகழ்ச்சியினை நிகழ்த்தி உள்ளேன்.

இதை கேட்ட யாவரும் தினந்தோறும் காலை மாலை அம்மையாரின் புகழை பாராயணம் செய்து இதை கேட்க்காத அனைவரிடமும் பரவச்செய்து

"இல்லற சுகம்" பெற்று மோக்ஷ வீடு பெற்று இந்திரன் சபையிலே ரம்பை ஊர்வசி காபரே நடனத்தை கண்டு கழிக்க எல்லாம் வல்ல "மாமா" வெற்றிலை பெட்டி செல் பொன் பிரிய ஜோல்நாலீச்வரனை பிரார்த்தித்து கொள்கிறேன்.

இந்த கலக்ஷேப நிகழ்ச்சி சீரும் சிறப்புமாக நடந்தேற பேருதவி செய்து நிகழ்ச்சிக்கு வந்த அனைவருக்கும் ஆண் பெண் பேதம் பாராது "பாகெட்" "உரைகள்" தாரளமாக வழங்கிய "சங்கு" மார்க் காண்டம் (சுந்தர காண்டம் அல்ல) கும்பினி யார்க்கும் அவர்கள் பனி சிறக்க வியாபாரம் பெருக்க வேண்டிக் கொள்கிறேன்.

நம மாருதி வண்டியே நம ஹ

ஹர ஹர ஐடேமேச்வரி !

2 comments:

  1. சூப்பருப்பா

    இந்த நடை அருமை . உன் வாசிப்பனுபவமும் கூறிய அவதானிப்பும் மிக நுட்பமாக வெளிப்பட்டிருக்கும் மொழி ஓட்டம் . அங்கதமும் தார்மீககங்கள் தொலைந்த அல்லது மறந்த சமூகத்தின் மீதான எள்ளலும் மிக நன்றாக பதிவு செய்யப் பட்டிருக்கும் இடுகை இது

    ReplyDelete
  2. nanri nanba nijamagave enakku un marumozhi migaperum ookathaiyum undhudhalaiyum alikirathu!

    ReplyDelete