Wednesday, August 26, 2009

புவியில் ஒரு சொர்க்கம் - வால்பாறை-5

புவியில் ஒரு சொர்க்கம் - வால்பாறை-5
இது என்னோட ஐந்தாவது பதிவு வால்பாறையை பத்தி. இது வரை நான் நான்கு பதிவுகள் வால்பாறையை பத்தி எழுதிஇருக்கேன். சொற்ப வாசகர்களே என்னுடைய வலைபூவிற்கு வந்து அதை படித்திருந்தாலும், சிலர் ஏன் பதிவை பாராட்டி பின்னூட்டம் இட்டு சென்றிருப்பது எனக்கு மிக்க மகிழ்ச்சியை தருகிறது உங்களுக்கு என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இது வால்பாறையை பற்றி நன் எழுதும் நிறைவு பகுதி. ஓகே ஓகே நீங்க எவ்வளவு தான் தாங்குவீங்க. அதன் சட்டு புட்டுனு முடிச்சிட்டு அடுத்த டிபார்த்மேண்ட டச் பண்ணலாம்னு பாக்கறேன்.. நாமளும் சும்மா உலக சினிமா.. உள்ளூர் முனிமா..வயித்துல எனிமானு.. பதிவ போடத்தான் வேலைக்காகும் போல இருக்கு.
ஓகே இனி ஓவர் டு வால்பாறை.. சரி வால்பாரைல வெறும் சைட் சீயங் மட்டும் தானா ஆன்மிகம் சம்மந்தமா ஏதும் இல்லையான்னு கேக்கறவங்களுக்கு இந்த பதிவு ரொம்ப உபயோகமைருக்கும்.
வேளங்கண்ணி சர்ச். (கார மலை)
இந்த சர்ச் என் வாழ்வில் என்றென்றும் மறக்க முடியாத ஒன்னு. நான் இந்த சர்ச் போகுறதுக்கு முன்னாடி நிஜமா அதுவரை வேற எந்த சுர்ச்க்கும் போனதே இல்லை. எனக்கு அவ்வளவு நம்பிக்கையும் இல்லை.
நான் முதல் முறை அக்காமலை போயிட்டு சாலமன் கூட வண்டியில திரும்பி வந்துட்டு இருக்கும் போது தூரத்தில இந்த சர்ச்ச காட்டி சாலமன் இந்த சுர்ச்க்கு போவோமான்னு கேட்டாரு.. நான் ரொம்ப திமிரா இல்லை நான் எந்த சுர்ச்க்கும் போறதில்லைனு சொன்னேன். அடுக்கு அவரு நீங்க கண்டிப்பா ஒரு நாள் இங்க போகத்தான் போறீங்கனு சொன்னாரு.. நான் எப்படின்னு கேட்டேன்.
நீங்க எதாவது மனசுல வேண்டிக்குங்க.. அது நடந்தா அடுத்தவாட்டி வரும் போது சர்ச்சுக்கு வாங்க இல்லனா வேனாம்ன்னாறு.
நானும் ஒரு கோரிக்கைய மனசுக்குள்ள வேண்டிகிட்டு பாக்கலாம்னு சொல்லிட்டேன். அவரு விடல கண்டிப்பா நீங்க வரத்தான் போறீங்கனு சத்யமே பண்ணாரு.. ஏன்னா அங்க வேண்டிகிட்ட யாரும் திரும்பி வராம இருந்ததே இல்லையாம்.
அட ஆச்சர்யம் பாருங்க என் வாழ்கைல நான் எது நடக்கவே நடக்காதுன்னு நினசேனோ (விஷயம் சீக்ரெட் பப்லீஸ்..)அந்த விஷயம் அந்த மாதவோட அருளால அசால்டா முடிஞ்சிருச்சி..
அதுக்காகவே அடுத்தவாட்டி நெஞ்சம் நிறைந்த நன்றிகளுடன், கண்கள் முழுதும் ஆனந்த கண்ணீருடன் அந்த தாயை தரிசித்தேன்.
என்னை பின்பற்றி என் நண்பனும் அது போலவே வேண்டிக்கொள்ள அதுவும் நிறைவேறியது என்றுசொன்னால் நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும். இப்போது நாங்கள் மீண்டும் நன்றி சொல்ல போகப்போகிறோம். (ஐயா ஜாலி இன்னொருவாட்டி வால்பாறை!!!). எனவே நீங்களும் அங்குசென்று இதை அனுபவபூர்வமாக உணருங்கள்.

கருமலை பால்லாஜி கோவில்


இதை தவிர அங்கு பிகே குரூப்க்கு சொந்தமான ஒரு அழகான பாலாஜி கோவிலும் உள்ளது.இந்த கோவில் ஓரளவிற்கு வால்பாரையிலேயே வுயரமான இடத்தில உள்ளது. இங்கு நின்று நீங்கள் பார்த்தீர்கள் என்றால் மேற்கு மலை தொடர்களின் மொத்த அழகையும் குத்தகைக்கு எடுத்து ரசிக்கலாம்.

சித்திவிநாயகர் கோவில்

மேலும் அடர்ந்த கானகத்தில் பிர்லா டி எஸ் டேடட் ( ஜய் ஸ்ரீ எஸ் டேடட் ) சித்தி விநாயகர் கோவிலும் வுள்ளது.இந்த விநாயகர் திருவுருவம் ஒரே பளிங்கு கல்லினால் செய்யப்பட்டது.மேலும் இதை இங்கு நிறுவ ஹெலி காப்டரில் தூக்கி வந்தார்களாம்.
இந்த கோவிலுக்கு சென்று அந்த ரம்யமான சூழ்நிலையில் ஒரு ஐந்து நிமிடம் அமருங்கள். அங்கேயே செட்டில் ஆகிவிடலாம் என்று தோணும். திரும்ப வருவதற்கே மனசு வராது.
மேலும் இந்த கோவிலை தாண்டி சிறிது தூரம் சென்றால் நல்ல முடி வியு பாயிண்ட் வரும். அந்த இடத்தின் சிறப்பு பற்றி சொல்ல ஒரு தனி பதிவே போட வேண்டும். அதானால் நீங்களே போய் பார்த்து விடுங்கள். ஒன்றே ஒன்று இந்த வியு பாய்ண்டில் இருந்து நீங்கள் பார்த்தல் தென் இந்தியாவிலேயே மிகவும் உயரமான ஆணை முடி (8848 feet aprox) தெரியும். அதன் அடுத்த பகுதில் தான் மூனாறு மற்றும் இரவிகுலம் தேசியபூங்கா உள்ளது.
மேலும் நகரின் மையத்தில் ஒரு அழகான மையபகுதியில் ஒரு முருகன் கோவிலும் உள்ளது. நீங்க இங்க குறைந்த பக்ஷம் ஒரு நாலு நாள் தங்கினால்தான் ஓரளவிற்கு நிறய இடங்களை பார்க்க முடியும். மேலும் வால்பாரைலிருந்து அடர்ந்த கானகம் வழியாக அதிரப்பள்ளி அருவி (புன்னகை மன்னன் பால்ஸ் ) செல்லலாம். அது ரொம்ப த்ரில்லிங்கா இருக்கும். மேலும் வால்பாறையில் தங்க குறைந்த அளவிலான லொட்ஜ்கள் மட்டும் உள்ளது. எனவே முடிந்தால் முன் பதிவு செய்யவும்.
சென்னை வாசியான எனக்கு வால்பாரையே பத்தி பதிவு எழுதற அளவிற்கு சுத்தி சுத்தி காமிச்சவர் எனது அருமை நண்பர் சாலமன் அவர்கள் தான். அவருக்கு எனது மனமார்ந்த நன்றியை உரிதாகுகிறேன்.
மேலும் உங்களுக்கு விபரங்கள் வேண்டும் என்றால் எனது மின் அஞ்சலுக்கு தொடர்பு கொள்ளவும்..



தங்களுடைய வாக்குகளையும் கருத்துகளையும் பதிவு செய்யவும்..

1 comment:

  1. அருமையான தகவல். நான் பல முறை வால்பாறைக்கு வந்து ரசித்துள்ளேன்

    ReplyDelete