Thursday, August 13, 2009

புவியில் ஓர் சொர்க்கம் - வால்பாறை

இறைவன் உலகை படைக்கும் போது எங்கும் பேதம் இல்லாது, இயற்கை எழில் கொஞ்சி விளையாடும் பிரதேசங்கலாக்தன் படைத்தான். இயற்கை தன அன்னை, அன்னையின் மடியில் அணைத்து உயிர்களும் பிறந்து, தவழ்ந்து. இணைந்து, வாழ்ந்து, களித்து, மறைந்து கொண்டிருந்த வரையில், யாதொரு துயரும் இல்லாது, நம் தாய் புவியும், நாமும் (மனிதன் அல்ல குரங்கு தாதாக்கள்) நம் சகோதர உயிரினங்களும் வாழ்ந்து வந்தோம். ஆனால் என்று நம் மூதாதையர்கள் தாவுவதை மறந்து, நடக்க ஆரம்பித்தார்களோ, அன்றே நம் நிம்மதிக்கு வந்தது வேட்டு.
என்னை பொருத்தவரையில், மனிதன் பரிணாமவளர்ச்சி(?) என்று மார்தட்டிக்கொண்டு செய்தவை அனைத்தும், ஆக்கபூர்வமாக மரியாதை விட அழிவிற்கு அழைத்து சென்றது தான் அதிகம்.
இதற்கு உதரணங்கள் சொல்லி உங்கள் நேரத்தை வீணடித்து கொண்டிருக்க நான் விரும்பவில்லை. எனவே இன்ட்ட்ரோவை இத்துடன் முடித்து கொண்டு விஷயத்திற்கு ஜும்ப் ஆவோமாக. எல்லாம் வல்ல இறைவன் என்னுடைய இந்த முதல் பதிவை படித்து முடிக்கும் வரை உங்களுக்கு தூக்கம் வராமல் அருள் பாலிப்பாராக!
நமக்கு இந்த காங்கிரீட் கட்டுக்குள் வாழ்றது ரொம்ப கடுப்பான விஷயம் . தினம் தூங்கி எழுந்தவுடன் டிராபிக்,சிக்னல்,பஸ்,நெரிசல்,புகை, வேலை , என்று ஒரு ஆறு மாதம் இதை தாக்கு பிடிப்பதே மிகவும் கஷ்டம். இருந்தாலும் என்ன செய்வது பிழைப்பு ஆச்சே. அதனால்தான் ஒரு ஆறுமாசத்துக்கு ஒருவாட்டி எங்காவது மனுஷன் தன் குரங்கு சேட்டைய கொஞ்சமா காட்டி இருக்க இடமா பாத்து ஓடிபோறது ஒரு நாலு நாளைக்கு. அந்த ஏழு ச்சி! நாலு நாள் தானுங்க நம்மளோட மீதி ஆறுமாசத்துக்கு ரிச்சார்ஜ்.
நாம அப்படி தேடி ஒரு ரெண்டு வருசத்துக்கு முன்னாடி போன இடம்தாங்க வால்பாறை. அதுக்கு முன்னாடி அந்த இடம் பத்தி தெரிஞ்சது எல்லாம் நம்ம அம்மா புகழ் எஸ் வி சேகரோட "வால்பாறை வெடி உப்பு பீரங்கி சாமி " வசனம் தான். அப்புறம் நம்ம சுபர் ஸ்டாரு நடிச்ச வால்பாறை வரதன் கேரக்டர் அவ்ளோதான்.
ஆனா சத்தியமா சொல்றேன் நான் வால்பறைய மட்டும் பாக்கலைனா வாழ்க்கைல மனசுக்கு நிம்மதி, இறைவன், இயற்கை, இந்த வர்ர்தைகள் எல்லாம் வெறும் வார்த்தையாகவே இருந்திருக்கும்.
சரி ரொம்ப மொக்க போட்டாச்சி .. வாங்க வூருக்கு போவோம் .
இந்த வால்பாறை மேற்கு தொடர்ச்சி மலைகள்ல, பாலக்காட்டு பள்ளத்தாக்கு அடுத்து ஆணைமுடி தொடர்ல அமஞ்சிருகுங்க . இதோட சராசரி உயரம் சுமார் ரெண்டாயிரம் அடிளர்ந்து மூனாயிரம் அடிவரைக்கும் .
சரி மீதி அடுத்த பதிவில் யாராவது என்ன எழுத சொன்னா மட்டும்!!!

4 comments:

  1. Nice photos, pls continue with providing other details.

    ReplyDelete
  2. thanks for visiting . I will try my best ..

    ReplyDelete
  3. Hi,

    கார்த்தி தம்பி நல்ல இருக்கு. நீ பெரிய ஆளா வருவடா.

    எனக்கு இந்த போஸ்ட் டைப் பண்ண கூகிள் டைப் ல translate பண்ணறதுகுள்ள

    மண்ட காஞ்சிடுசீ நீ full post பண்ண யெவ்லோ கஷ்ட பட்டன்னு புரியுது

    இருந்தாலும் ஸ்பெல்லிங் கொஞ்சம் சரி பண்ணு. அப்பரும் இந்த sun tv நடைல

    எழுதாதே உன்னோட speaking style நல்லா இருக்கும் அதயே மைண்டைன் பண்ணு

    உன்னோட ஊர் சுத்தர மேட்டெர் மட்டும் இல்லாம உன்னோட நக்கல் காமெடி

    topic போஸ்ட் இருந்தா ரொம்ப நல்லா இருக்கும்.

    நான் உங்ககிட்ட இன்னும் நிறைய எதிர்பார்கிறேன். ஆன்மீகம் மற்றும் காமம் இதுலே உங்க போஸ்ட் கண்டிபாக நல்லா இருக்கும்.

    தொடர்ந்து எழுதுங்க நல வாழ்த்துகள்

    சீனு
    காட்டான் குளத்தூர் புலி

    ReplyDelete
  4. Very nice to see a post about Valparai. I have been to Aliyar many times but never been to Valparai. After reading your post, I am tempted to go to Valparai.

    ReplyDelete