Sunday, October 4, 2009

வந்தாச்சு வோல்டு தமிழ் மாநாடு - தீந்தாச்சு தமிழர்களின் துயரங்கள் ........

வந்தாச்சு வோல்டு தமிழ் மாநாடு - தீந்தாச்சு தமிழர்களின் துயரங்கள் ........
உலக தமிழ் மக்களே உலகவரலாற்றிலேயே இதுவரை யாருமே காணாத , மிக பிரமாண்டமான புத்தம் புதிய ஒரு மெகா ஹிட் மாநாடு மிகவும் அவசியமான இந்த வேளையிலே நடை பெற இருக்கிறது. உங்கள் கலைஞர் டிவியில் காண தவறாதீர்கள்.
இந்த மாநாட்டில் நடைபெற விருக்கும் நிகழ்ச்சிகள்..
ஆராய்ச்சி பிரிவு
இலங்கை தமிழரை காப்பாற்ற எடுத்த முயற்சிகளின் பட்டியல் என்று 1950 லிருந்து நடந்த சப்பை நிகழ்வுகளையே பட்டியல் இட்டு அரைத்த மாவையே திரும்ப அரைத்து மாவு வீணாகி மக்கள் உசாராகி எல் கே ஜி பையன் கூட ரிபீடாக தான் அளிக்கும் அறிக்கையை ஒபிப்பதால் புதிதாக எதாவது கதை சொல்லலாமா என்று கதை காண வரலாற்று நிகழ்வுகளை தேடும் தொன் தமிழர் ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்பித்தல்.
உரையாடல், கலந்தாய்வுப் பிரிவு
மேற்கண்ட பிரிவுகள் அனைத்திலும் கழக குடும்ப பழைய, புதிய, லேட்டஸ்ட் அண்ட் அப் கமிங் கவிதாயினிகள், சொல்லாடல் வல்லுனர்கள் கலந்து கொண்டு மாநாடு நாயகனை தங்கள் வாய் ஜாலங்கள் காட்டி மகிழ் வித்து அடுத்த எலேக்க்சனில் பா. உ , ச ம உ .. முதலிய பதவிகளை பெறுவர்...
கவிதை பிரிவு...
வழக்கம் போல் மேற்கண்ட மங்கள கோஷ்டியில் பாதி உறுப்பினர்களும் , டை மண்டு, ஜாலி, கவி கோயன், முதலான வெட்டி கவிஞர்களும் போனான் வந்தான் போன்ற வளரும் கவிஞர்களும் வழக்கம் போல் கை தாளம் (ஜால்ரா) தட்டி மங்களம் பாடுவார்கள்!
நீங்களும் வாயை பிளந்துகொண்டு கேட்கலாம்.
விருது வழங்குதல்
வோல்டு சாதனையாளர் விருது முதல் லோக்கல் சோதனையாளர் விருது பெற்ற ஒருவருக்கு மேலும் பல விருதுகளை வழங்கி அவரை குஷி படுத்துதல் . மற்றும் மிச்ச சொச்ச குட்டி குட்டி விருதுகளை மலேசியா பெருசுக்கோ , பாரிஸ் பெருசுக்கோ பிட்ச்சை போடுதல்! ( என்ன ஒரு ராஜ தந்திரம்! அப்ப தானே நம்ம புகழ் பாரெல்லாம் (டாஸ்மாக் பார் அல்ல) பரவும்!)
ஆனால் கல்தோன்றி மண்தோன்றா காலத்தில் இருந்தே யாரவது மொளகாயை அரைக்க தலையினை காட்டி கொண்டிருக்கும் தமிழ் மக்களே! இந்த வேர்ல்ட் மாநாடிற்க்கும் ... உங்கள் அன்றாட பிரச்சனைகளான விலை வாசி உயர்வு தம்மா தூண்டு எலுமிச்சம் பழம் அஞ்சு ரூபா (வாங்கி தலைல கூட தேய்க்க முடியாலங்கோ!!) .. முள்வேலிக்குள் நாடாண்ட தமிழினம்,
தண்ணீர் இல்லாமல் சாகும் விவசாயம் .. முதலான பைசா பெறாத விசயங்களுக்கும் தொடர்பு இருப்பதாக நீங்கள் நம்பினால் அதற்கு கம்பனி பொறுப்பு அல்ல!

3 comments:

  1. நல்ல பதிவு!
    இந்த மாநாட்டை பார்ப்பதோ, அதில் பங்குபற்றுவதோ ஒவ்வொரு உண்மைத் தமிழனுக்கும் தற்கொலைக்கு சமனாகும்!!!
    சீமான், நெடுமாறன் உட்பட தமிழை நேசிக்கும் எவரும் இந்த மாநாட்டில் பங்கு பற்ற மாட்டார்கள் என எதிர்பார்கலாம்!!!
    கருணாநிதி இருக்கும் வரையில் தமிழனுக்கும் தமிழுக்கும் தினந்தோறும் சாவுதான்.

    ReplyDelete
  2. ஒபிப்பதால்
    மாநாடிற்க்கும்
    ரிபீடாக
    குட்டி குட்டி

    கவனம் குலோத்துங்கன் சார் !

    ReplyDelete
  3. nari mithran saar! karuthil kolgiren!

    ReplyDelete